உதவி இயக்குநர்களுக்கு வீட்டுமனை கொடுத்த இயக்குநர்!

தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹரி, சாமி படத்தின் வெற்றியால் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களில் தன்னுடன் வேலை செய்த உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 20 பேர்களுக்கு தனது அன்பளிப்பாக, காஞ்சிபுரம் அருகே தலா ஒரு கிரவுண்டு நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஹரி முதன்முதலாக இயக்குநர் ஜீவபாலனிடம் ("வளையல் சத்தம்' இயக்குநர்) உதவி இயக்குநராக வேலை செய்தார். அந்த நன்றிக் கடனுக்காக, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஜீவபாலனுக்கு, அரை கிரவுண்டு நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.
More from Filmibeat
assistant directors இயக்குநர் ஹரி உதவி இயக்குநர் சாமி திரைப்படம் ஜீவபாலன் வீட்டு மனை director hari gift house plots jeeva balan sami movie


Click it and Unblock the Notifications











