twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதார்த்த நாயகன் பாக்யராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்… வாழ்த்தும் ரசிகர்கள் !

    |

    சென்னை : இயக்குனர் நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    பாக்யராஜ் 1953ம் ஆண்டு ஜனவரி 7ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பிறந்தார்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    பாக்யராஜ் ஒரு எதார்த்தமான பேர்வழி, அவருடைய எதார்த்தம் தான், அவருடைய பல வெற்றிப்படங்களுக்கு பிளஸ்சாக அமைந்தன. இயக்குனர் பாரதிராஜாவின் செல்லப்பிள்ளையான இவர், 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார்.

    உதவி இயக்குனர்

    உதவி இயக்குனர்

    கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனராகி அந்த படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருந்தார். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் ஹோட்டல் காட்சியில் நயம்பட நடித்து அனைவர் நினைவிலும் நின்றார். சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதும் பாக்யராஜ் தான்.

    கதாநாயகன்

    கதாநாயகன்

    உதவியாளர், உதவி இயக்குனர், வசனகர்த்தா என படிப்படியாக தனது திறமையால் வெற்றி நடைபோட்டு பயணித்த பாக்யராஜ், புதியவார்ப்புகள் திரைப்படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படமே பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்து கதாநாயகன் என்ற அந்தஸ்தை இவருக்கு பெற்றுத்தந்தது.

    சிறந்த இயக்குனர்

    சிறந்த இயக்குனர்

    சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தும் இருந்தார் பாக்யராஜ். 70வது மற்றும் 80களில் பிறந்தவர்கள் இந்த திரைப்படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. ஒரு குடும்பத்தின் வறுமையை அப்பட்டமா காட்டி இருப்பார்கள். திரையரங்கில் பல நாட்கள் ஓடிய இந்த திரைப்படம், பாக்யராஜ் சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

    முருங்கைக்காய் சமாசாரம்

    முருங்கைக்காய் சமாசாரம்

    நகைச்சுவை ஆனாலும் சரி, சோகமானாலும் சரி, அட சமாசாரமானாலும் சரிபாதியாக கொடுப்பதில் கில்லாடியானவர் பாக்யராஜ். அதற்கு எடுத்துக்காட்டாக பல திரைப்படங்களை சொல்லலாம். குறிப்பாக முந்தானை முடிச்சு திரைப்படத்தில் காதல், சென்டிமென்ட், சமாசாரமேன கலந்து கொடுத்திருப்பார். குறிப்பாக அந்த முருங்கைக்காய் சமாசாரத்தை நச்சுனு சொல்லி இருப்பார்.

    புதுமையான திரை பயணம்

    புதுமையான திரை பயணம்

    இவரது பல திரைப்படங்கள் இளையர்களுக்கு முன்உதாரணமாக இருந்துள்ளன. எந்த கருத்தையும் சொல்லவும் பாக்யராஜ் தயங்கியதே இல்லை. இவரது முயற்சிகள் புதுமையாகவும், அதே நேரத்தில் புரியும் படியாகவும் இருந்தன. தானே ஹீரோ, தானே இயக்குனர், தானே இசையமைப்பாளர், தானே பாடகர் என்று கூட அவரது சினிமா பயணம் இருந்தது.

    Recommended Video

    Bhagyaraj - Ravindar - Santhosh prathap speech | Kaatrinile movie Pressmeet| Filmibeat Tamil
    இன்று பிறந்த நாள்

    இன்று பிறந்த நாள்

    பாக்யராஜ் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    English summary
    Director K Bhagyaraj celebrating his 69 Birthday, பாக்யராஜ் பிறந்த நாள்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X