twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாலி எழுதிய அஜித் பாடலைக் கேட்டு அமைதியாக இருந்த முருகதாஸ்... கடுப்பான வாலி

    |

    சென்னை: MGR முதல் சிவ கார்த்திகேயன் வரை, MSV முதல் அனிருத் வரை, பாலச்சந்தர் முதல் வெங்கட் பிரபு வரை நான்கு தலைமுறை கலைஞர்களுடன் பணிபுரிந்த நபர் கவிஞர் வாலி அவர்கள்.

    "இவன் பில்லா ரங்கா பாட்ஷாதான், இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான், வெனிஸ் கட்டில் மினி ஸ்கெர்ட்டில் நடக்குது" போன்ற இளமை ததும்பும் பாடல் வரிகளை தன்னுடைய என்பதாவது வயதிலும் எழுதியவர்.

    அப்படிப்பட்ட வாலி அவர்கள் சில சமயம் புது இயக்குநர்களுடன் பணிபுரிய யோசிப்பாராம். இயக்குநர் முருகதாஸுடனும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    இதென்னா புது ட்விஸ்ட்...விஷாலின் லத்தி ரிலீஸ் தள்ளிபோகிறது...உறுதியானது சிம்பு - விஷால் மோதல் இதென்னா புது ட்விஸ்ட்...விஷாலின் லத்தி ரிலீஸ் தள்ளிபோகிறது...உறுதியானது சிம்பு - விஷால் மோதல்

    தீனா

    தீனா

    நடிகர் அஜித்திற்கு 'தல' என்கிற பெயர் வந்ததும், அவரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியதும், இந்திய அளவில் வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் முருகதாஸுக்கு முதல் படம் என்பதும் தீனா படம் மூலம்தான் நடந்தது. முதன் முதலாக அஜித் படத்துக்கு யுவன் இசையமைத்ததும் அந்தப் படத்தில்தான். அதன் கன்னட ரீமேக்கில் நான் ஈ நடிகர் சுதீப் நடித்திருந்தார். கன்னடத்தில் மட்டுமின்றி வங்காள மொழியிலும் தீனா படம் ரீமேக் ஆனது.

    வாலி

    வாலி

    தீனா படத்திற்கு பாடல் எழுத வாலியை அனுகியுள்ளார் முருகதாஸ். வழக்கமாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதக் கூடிய வாலி அந்தப் படத்தில் ஒரு பாடலை தவிர அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பார். யுவனின் துள்ளலான இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை வாலி முன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    வத்திக்குச்சி பத்திக்காதுடா

    வத்திக்குச்சி பத்திக்காதுடா

    புதுமுக இயக்குநர்களுக்கு பாடல்கள் எழுத வாலி தயங்குவாராம். காரணம் பாடல் பிடிக்கவில்லை என்றாலும், வாலி ஏதாவது நினைத்துக் கொள்வார் என்று எதுவும் பேசாமல் பாடலை வாங்கிக் கொண்டு போய்விடுவார்களாம். அப்படி முருகதாஸும் வத்திக்குச்சி பாடலுக்கான சூழ்நிலையை சொல்ல, ஒரு வாரம் கழித்து பாடல் எழுதி முடித்து முருகதாஸை அழைத்துள்ளார் வாலி. வத்திக்குச்சி பாடல் வரிகளை படித்துக் காட்டியதும், முருகதாஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாராம். கடுப்பான வாலி, "யோவ் பாட்டு புடிச்சிருந்தா நல்லா இருக்குன்னு சொல்லு, இல்லன்னா இல்லன்னு சொல்லு. அத விட்டுட்டு செத்தவன் கைல வெத்தல பாக்கு குடுத்தா மாதிரி உக்காந்திருக்க" என்று கடிந்து பேசியுள்ளார்.

    ஃபேவரைட் Icon

    ஃபேவரைட் Icon

    அப்போது, "பாட்டு நல்லா இருக்கு சார். ஆனா படம் ஃபுல்லா அஜித் வாய்ல வத்திக்குச்சி வச்சிருக்கா மாதிரி மேனரிசம் இருக்கு. அத நா சொல்லாமலே எப்படி வத்திக்குச்சி பத்திக்காதுடான்னு வரிகள் எழுதுனீங்க?" என்று ஆச்சர்யமாக கேட்டாராம் முருகதாஸ். அப்படிப்பட்ட முருகதாஸிடம் ஒரு முறை,"உங்களது ஃபேவரைட் icon யார்?" என்று ஒரு நிருபர் கேட்க, வாலி ஐயா என்று பதலளித்துள்ளார் முருகதாஸ்.

    English summary
    Director Murugadoss Didn’t react to the Song Composed For ajith, Lyricist Vali Frustuated
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X