twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வால்டர் வெற்றிவேல் படத்தை ஜெயலலிதாவிடம் காண்பிக்க பயந்த இயக்குநர் பி.வாசு

    |

    சென்னை: இயக்குநர் பி.வாசு தற்சமயம் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

    நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு பற்றி வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    நிறைய ஹிட்சை எதிர்பார்க்கலாம்.. குத்து ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா உறுதி! நிறைய ஹிட்சை எதிர்பார்க்கலாம்.. குத்து ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா உறுதி!

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2

    ஆப்தமித்ரா என்கிற கன்னட திரைப்படத்தை தான் தமிழில் சந்திரமுகியாக எடுத்து வெற்றி படமாக கொடுத்தார் பி.வாசு. அதன் பின்னர் ஆப்தமித்ராவினுடைய இரண்டாம் பாகமான ஆப்தரக்க்ஷகாவை கன்னடத்தில் இயக்கியிருந்தார். அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதனை தமிழில் சந்திரமுகி 2 என்று எடுக்க முற்பட்டபோது அது செயல்படாமல் போனது.

    அஜித் கூட்டணி

    அஜித் கூட்டணி

    சந்திரமுகி திரைப்படத்திற்கு பின்னால் பி.வாசு நடிகர் அஜித் நடித்த பரமசிவன் படத்தை இயக்கினார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்ற சூழ்நிலை இருந்தபோது அஜித்தான் அதில் நடிப்பார் என்று ஒரு செய்தி பரவலாக இருந்தது. ஆனால் அந்தப் படம் உருவாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இது ஆப்தரக்க்ஷகாவின் கதையா அல்லது வேறு கதையா என்பது தெரியவில்லை. அது மட்டுமின்றி இது ராகவா லாரன்ஸ் வைத்து அவர் இயக்கம் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வால்டர் வெற்றிவேல்

    வால்டர் வெற்றிவேல்

    1990-களின் முற்பகுதியில் மிகப் பெரிய வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தவர்தான் பி.வாசு. அதில் முக்கியமான திரைப்படமாக கருதப்படுவது நடிகர் சத்யராஜ் நடித்திருந்த வால்டர் வெற்றிவேல். போலீஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் கண்டிப்பாக வால்டர் வெற்றிவேலிற்கு தனி இடம் உண்டு. அந்தப் படத்தை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் போட்டு காண்பிக்க சற்று யோசித்தாராம் பி.வாசு. ஜெயலலிதா அம்மையார் எப்போது முதலமைச்சராக பதவிக்கு வந்தாலும் திரைத்துறையில் ஒரு முக்கிய பொறுப்பை வாசுவிடம் கொடுப்பாராம். வாசு அவர்களுடைய தந்தை, சித்தப்பா என அனைவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்துள்ளது.

    ஜெயலலிதா ரியாக்‌ஷன்

    ஜெயலலிதா ரியாக்‌ஷன்

    மன்னன் திரைப்படத்தை ஜெயலலிதாவிற்கு போட்டு காண்பிக்க வேண்டும் என்ற போது, ஒரு பெண்ணை வில்லியாக சித்தரித்து படம் எடுத்துள்ளீர்கள். அதனை காண்பிக்காதீர்கள் என்று பலரும் கூறினார்களாம். ஆனால் அந்தப் படம் அவருக்கு பிடிக்கும் என்று தெரிந்து அவருக்கு போட்டு காண்பித்தாராம் பி.வாசு. ஆனால் வால்டர் வெற்றிவேல் படத்தை பொருத்தவரையில் வாசுவிற்கு சற்று தயக்கம் இருந்ததாம். காரணம் மந்திரியை செருப்பால் அடிப்பது போல் அந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கும். இருப்பினும் படத்தை பார்த்த பின்னர், ஒரு போலீஸ் அதிகாரியும், அரசியல்வாதியும் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதனை தெளிவாக காட்டியிருக்கிறீர்கள் என்று ஜெயலலிதா பாராட்டியதாக வாசு கூறியிருக்கிறார்.

    English summary
    Director P.Vasu is currently directing the second part of Chandramukhi under the production of Lyca. Actor Raghava Lawrence and Vadivelu are playing the lead roles. In this case, Vasu has told in an interview about an interesting incident that happened during the movie Walter Vetrivel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X