twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அந்தப் பாட்டை நான் வாசிச்சதுன்னா இளையராஜா சொன்னாரு?’'டிரம்மர்' புருஷோத்தமன் பற்றி இயக்குனர் சுகா!

    By
    |

    சென்னை: இளையராஜாவிடம் அவரது ஆரம்பகாலத்தில் இருந்தே டிரம்மராக இருந்து வந்த புருஷோத்தமன் இன்று காலமானார்.

    இதையடுத்து இசைக் கலைஞர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    இந்நிலையில் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான சுகா, தனது வேணுவனம் இணையதளத்தில், புருஷோத்தமன் பற்றி பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் இருந்து சில பகுதிகள்..

    'வலிமை' தயாரிப்பாளர் வீடு வரை வந்த கொரோனா.. பதறிப் போன திரையுலகம்.. அவசர அவசரமாக அறிக்கை வெளியீடு'வலிமை' தயாரிப்பாளர் வீடு வரை வந்த கொரோனா.. பதறிப் போன திரையுலகம்.. அவசர அவசரமாக அறிக்கை வெளியீடு

    இருக்க முடியும்?

    இருக்க முடியும்?

    பிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக் கலைஞர் சிவமணி குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்ததும் காட்டிய மரியாதையில் அத்தனை பணிவும், உண்மையும் தெரிந்தது. இளையராஜா அவர்களாலும் மற்ற மூத்த திரையிசைக் கலைஞர்களாலும் ‘புரு' என்றழைக்கப்பட்ட புருஷோத்தமன் என்னும் ஒப்பற்ற தாள வாத்தியக் கலைஞர்தான், அவர். இன்றைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞராக மதிக்கப்படும் சிவமணி ஒருவரைப் பார்த்து வணங்குகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞராக இருக்க முடியும்?

    இளைய நிலா பொழிகிறது

    இளைய நிலா பொழிகிறது

    ஆனால் புரு இயல்பானவர். அவரது குடும்பமே இசைக்குடும்பம். அவரது சகோதரர் சந்திரசேகர் அசாத்தியமான கிடார் கலைஞர். சந்திரசேகர்தான் ‘இளைய நிலா பொழிகிறது' பாடலுக்கு கிடார் வாசித்தவர். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் டிரம்மராக இருந்த புரு, ஒரு கட்டத்தில் இளையராஜாவின் இசைத்துணுக்குகளை வைத்துக் கொண்டு இசைக்கலைஞர்களை இசைக்க வைக்கும் பணிக்கு உயர்ந்தார்.

    எப்படி வாசிச்சிருக்கார்

    எப்படி வாசிச்சிருக்கார்

    மும்பையில் ஒரு விடுதியில் இளையராஜா அவர்களுடன் தங்கியிருந்தபோது எனது ஐ பேடில் அவரது பாடல்களை ஒலிக்கச் செய்தேன். ‘மனிதனின் மறுபக்கம்' திரைப்படத்தில் சித்ரா பாடிய ‘சந்தோஷம் இது சந்தோஷம்' பாடலை நான் ஒலிக்கச் செய்தபோது இளையராஜாவின் முகம் மலர்ந்தது. முழு பாடலையும் கேட்டு முடித்து விட்டு சொன்னார். ‘இந்தப் பாட்டுக்கு லைவ்வா புரு எப்படி வாசிச்சிருக்கார் பாத்தியா?'இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரிந்தது. சென்னைக்கு வந்த பிறகு புருவிடம் மேற்படி சம்பவத்தைச் சொன்னேன்.

    ‘எந்த பாட்டு?' என்றார். கைபேசியில் உள்ள பாட்டை ஒலிக்கச் செய்தேன்.

    ‘நான் வாசிச்சதுன்னா ராஜா சொன்னாரு?! ஞாபகம் இல்லப்பா'.

    ‘அதுசரி. ஒண்ணு ரெண்டு வாசிச்சிருந்தா ஞாபகம் இருக்கும்! ஓராயிரம் பாட்டுல்ல வாசிச்சிருக்கீங்க?'

    மடை திறந்து

    மடை திறந்து

    புரு அவர்களிடம் பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரே திரையில் தோன்றும் ‘மடை திறந்து (நிழல்கள்), மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்), பருவகாலங்களின் கனவு (மூடுபனி), கவிதை பாடு குயிலே (தென்றலே என்னைத் தொடு), வான்மீதிலே (ராகங்கள் மாறுவதில்லை), யார் யாரோ (செல்வி), என்னம்மா கண்ணு சௌக்கியமா (மிஸ்டர் பாரத்), அட மச்சமுள்ள மச்சான்(சின்ன வீடு), சங்கீத மேகம்(உதயகீதம்), ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), சிறிய பறவை சிறகை விரித்து (அந்த ஒரு நிமிடம்), பூ போட்ட தாவணி (காக்கிச்சட்டை),

    இன்னும் என்னை

    இன்னும் என்னை

    காதல் மகராணி (காதல் பரிசு), வனிதாமணி (விக்ரம்), ஒரு காதல் என்பது (சின்னத்தம்பி பெரிய தம்பி), ரம்பம்பம் (மைக்கேல் மதனகாமராஜன்), புது மாப்பிள்ளைக்கு(அபூர்வ சகோதரர்கள்), நீ அப்போது பாத்த புள்ள(பகல்நிலவு), கன்னிப்பொண்ணு கைமேலே (நினைவெல்லாம் நித்யா), அப்பப்பா தித்திக்கும் (ஜப்பானில் கல்யாணராமன்), தொடாத தாளம் (ஆனந்த்), இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் (சிங்கார வேலன்), இன்னும் பல பாடல்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் சில பாடல்களை நினைவுபடுத்தி ஏதேனும் சில வார்த்தைகள் சொல்லுவார். அவராக சில பாடல்களைச் சொல்வதுண்டு. அப்படி அவர் சொன்ன பாடல்களில் ஒன்று, ‘எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் ‘மேகம் கொட்டட்டும்' பாடல்.

    வியந்து தள்ளினார்

    வியந்து தள்ளினார்

    எனது 'படித்துறை'திரைப்படத்துக்காக திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தேன். பாடல் பதிவு மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத அந்தக் கலைஞர்கள் வாசித்ததை புருதான் கண்டக்ட் செய்தார். இளையராஜாவிடம் அவர்களின் வாசிப்பை வியந்துத் தள்ளினார். அவர்கள் வாசிக்கும் போது அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடியபடிதான் கன்டக்ட் செய்தார். சொல்லப்போனால் அந்தக் கலைஞர்களை அழைத்து வந்ததனாலேயே என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இசைக்கலைஞர்

    இசைக்கலைஞர்

    இந்தியாவின் மிகச் சிறந்த டிரம்ஸ் கலைஞர்களான நோயல் கிராண்ட், ஃபிரான்கோ வாஸ் போன்றோருக்கு இணையான மரியாதைக்குரிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமான செய்தி வந்த இன்றைய நாளில் ‘ரெட்டைவால் குருவி' திரைப்படத்தின் ‘கண்ணன் வந்து பாடுகிறான்' பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாளத்தில் புருஷோத்தமன் அவர்களையும், கூடவே ‘வாத்தியார்' பாலுமகேந்திரா அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன். ஒப்பற்ற தாளவாத்தியக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் காலமான இன்று ‘வாத்தியார்'பாலுமகேந்திராவின் பிறந்தநாள்!

    English summary
    Director Suka shares his experience with Drummer Purushothaman
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X