34 இயக்குநர்களை அறிமுகம் செய்த ஆர் பி சௌத்ரிக்குப் பாராட்டுவிழா!

By Shankar

RB Chowdry
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் இதுவரை 80 படங்களை தயாரித்தவர். சின்ன பட்ஜெட்டில், குறுகிய காலத்தில் தயாரித்து சூப்பர் ஹிட் படங்களாக மாற்றிய பெருமை சௌத்ரிக்கு உண்டு.

இப்போது அவர் தயாரித்துள்ள 81-வது படம், 'பிள்ளையார் தெரு கடைசி வீடு.' இந்த படத்தில், பெரிய இடைவெளிக்குப் பிறகு அவருடைய மகன் 'ஜித்தன்' ரமேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். திருமலை கிஷோர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, ஆர்.பி.சௌத்ரியால் அறிமுகம் செய்யப்பட்ட 34 இயக்குநர்கள் சேர்ந்து வெளியிட, விஷால், ஆர்யா, பரத், பிரசன்னா, சிபிராஜ், விக்ராந்த், சாந்தனு, ஜெய் ஆகிய 8 கதாநாயகர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா கே.பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், எஸ்.பி.ஜனநாதன், சசி, எழில், பேரரசு, ராஜகுமாரன், பாலசேகரன், ராசு மதுரவன், ரவிமரியா, பாரதி கண்ணன், சாய் ரமணி, இசையமைப்பாளர் சக்ரி, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், டாக்டர் சீனிவாசன், படத்தின் கதாநாயகி சஞ்சனா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

பாராட்டு விழா

விழாவில் பேசிய இயக்குநர்கள் அனைவரும் 'புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வதில், ஆர்.பி.சவுத்ரிக்கு இணை அவர்தான். அவருடைய துணிச்சல் யாருக்கும் வராது. இதுவரை அவர் 34 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X