twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திவ்யா... ஆச்சார்யா.. பாலாவின் அசிஸ்டெண்டான ரவி இயக்கும் ஆச்சார்யா படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.தமிழில் ரொம்ப காலமாக போராடி வரும் விக்னேசுக்கு இந்தப் படம் ஒரு வழியாக நல்ல வழியைக் காட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வந்து கஷ்டப்பட்ட காலத்தில் பாலாவின் ரூம் மேட் விக்னேஷ்.அப்போது பாலாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்த சேது படத்தில் ஹீரோவாக விக்னேஷைத் தான் முதலில்போட முடிவு செய்திருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. விக்ரம் ஹீரோவானார், புதிய வாழ்வு பெற்றார்.இந் நிலையில் பாலாவின் உதவியாளரான ரவி இயக்கும் மிக மிக வித்தியாசமான கதையுடன் கூடிய படத்தில்திவ்யா, விக்னேஷ் ஜோடி நடிக்கிறது.வீடுதோறும் வேதம் சொல்லித் தந்து யாசகம் பெற்று வாழும் ஒரு ஐயங்கார் வீட்டு இளைஞனின் போராட்டம்குறித்த படம் இது. அவன் வாழ்க்கை, அவன் காதல், அவனது கனவுகள், சமூகத்துடனான அவனது உரசல்கள்என எதார்த்தமான ஒரு மனிதனை சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரவி.படத்தில் குத்தாட்டமோ, குழவி ஆட்டமோ இல்லை. கதையே ராஜா. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு வலிமிகுந்த கதையாம். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு சேது தானாம்.இது வெறும் கதையும் அல்ல என்பது தான் சுவாரஸ்யம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாமேநிஜத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆட்கள் தானாம். தான் நேரில் பார்த்ததையே சினிமாவாக்கியிருக்கிறார் ரவி,அதுவும் அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு.இது சினிமா அல்ல... வாழ்க்கை என்கிறார் ரவி. படத்தில் 8 பாடல்கள் உண்டு. ஆனால், அதை ஹீரோவோஅல்லது ஹீரோயினோ பாடப் போவதில்லை. எல்லாமே பேக்கிரவுண்டில் வந்து போகும் பாடல்கள் தான்.படத்தில் எந்த இடத்தில் பாடல் காட்சி வேண்டும் என்று முடிவு செய்து பாடல் காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டுத் தான் பாடலாசிரியரிடம் பாடலை எழுதச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.கதையின் கனத்தை உள்வாங்கி கண்கலங்கியபடியே வரிகளை எழுதித் தந்தாராம் நா.முத்துக்குமார்.படத்திற்கு இசை தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. வழக்கமான தனது கானா ஸ்டைலை எல்லாம் தூக்கிஓரங்கட்டிவிட்டு இசை யாகம் செய்துள்ளாராம். பாரதியாரின் ஒரு பாடலுக்கும் புதிய டியூன் போட்டுகலக்கியிருக்கிறாராம். இதில் இசையமைப்பாளர் பரத்வாஜும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ள விக்னேஷ் அந்த கேரக்டராகவே கடந்த ஒரு வருடமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். படத்துக்காக மிக நீண்ட தாடி வளர்த்தும், நீண்ட முடி வளர்த்தும் ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். அழகான, பயம் நிறைந்த பிராமணப் பெண் வேடத்தில் அறிமுகமாகும் திவ்யாவும்நடிப்பில் கலக்கியிருக்கிறார்.நாசர், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் இன்னொரு மைல் கல்லாகஇருக்கும் என்கிறார்கள்.

    By Staff
    |
    பாலாவின் அசிஸ்டெண்டான ரவி இயக்கும் ஆச்சார்யா படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.

    தமிழில் ரொம்ப காலமாக போராடி வரும் விக்னேசுக்கு இந்தப் படம் ஒரு வழியாக நல்ல வழியைக் காட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வந்து கஷ்டப்பட்ட காலத்தில் பாலாவின் ரூம் மேட் விக்னேஷ்.

    அப்போது பாலாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்த சேது படத்தில் ஹீரோவாக விக்னேஷைத் தான் முதலில்போட முடிவு செய்திருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. விக்ரம் ஹீரோவானார், புதிய வாழ்வு பெற்றார்.

    இந் நிலையில் பாலாவின் உதவியாளரான ரவி இயக்கும் மிக மிக வித்தியாசமான கதையுடன் கூடிய படத்தில்திவ்யா, விக்னேஷ் ஜோடி நடிக்கிறது.

    வீடுதோறும் வேதம் சொல்லித் தந்து யாசகம் பெற்று வாழும் ஒரு ஐயங்கார் வீட்டு இளைஞனின் போராட்டம்குறித்த படம் இது. அவன் வாழ்க்கை, அவன் காதல், அவனது கனவுகள், சமூகத்துடனான அவனது உரசல்கள்என எதார்த்தமான ஒரு மனிதனை சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரவி.

    படத்தில் குத்தாட்டமோ, குழவி ஆட்டமோ இல்லை. கதையே ராஜா. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு வலிமிகுந்த கதையாம். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு சேது தானாம்.

    இது வெறும் கதையும் அல்ல என்பது தான் சுவாரஸ்யம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாமேநிஜத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆட்கள் தானாம். தான் நேரில் பார்த்ததையே சினிமாவாக்கியிருக்கிறார் ரவி,அதுவும் அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு.

    இது சினிமா அல்ல... வாழ்க்கை என்கிறார் ரவி. படத்தில் 8 பாடல்கள் உண்டு. ஆனால், அதை ஹீரோவோஅல்லது ஹீரோயினோ பாடப் போவதில்லை. எல்லாமே பேக்கிரவுண்டில் வந்து போகும் பாடல்கள் தான்.

    படத்தில் எந்த இடத்தில் பாடல் காட்சி வேண்டும் என்று முடிவு செய்து பாடல் காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டுத் தான் பாடலாசிரியரிடம் பாடலை எழுதச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

    கதையின் கனத்தை உள்வாங்கி கண்கலங்கியபடியே வரிகளை எழுதித் தந்தாராம் நா.முத்துக்குமார்.

    படத்திற்கு இசை தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. வழக்கமான தனது கானா ஸ்டைலை எல்லாம் தூக்கிஓரங்கட்டிவிட்டு இசை யாகம் செய்துள்ளாராம். பாரதியாரின் ஒரு பாடலுக்கும் புதிய டியூன் போட்டுகலக்கியிருக்கிறாராம். இதில் இசையமைப்பாளர் பரத்வாஜும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

    படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ள விக்னேஷ் அந்த கேரக்டராகவே கடந்த ஒரு வருடமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். படத்துக்காக மிக நீண்ட தாடி வளர்த்தும், நீண்ட முடி வளர்த்தும் ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். அழகான, பயம் நிறைந்த பிராமணப் பெண் வேடத்தில் அறிமுகமாகும் திவ்யாவும்நடிப்பில் கலக்கியிருக்கிறார்.

    நாசர், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் இன்னொரு மைல் கல்லாகஇருக்கும் என்கிறார்கள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X