»   »  பொட்டி வந்துருச்சு....

பொட்டி வந்துருச்சு....

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 3 படங்கள் படு லேட்டாக ரிலீஸ் ஆனதால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.இருப்பினும் மாலைக் காட்சி முதல் படங்கள் திரையிடப்பட்டதால் கோபத்தை மறந்து தங்கள் தலைகளைதிரையில் பார்த்து குதூகலித்தனர் ரசிகர்கள்.

தீபாவளிக்கு 7 புதுப் படங்கள் திரைக்கு வந்தன. சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்த்தின் தர்மபுரி, அஜீத்தின்வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ, ஆர்யாவின் வட்டாரம், மறந்தேன் மெய் மறந்தேன் ஆகியபடங்களே அவை.

இவற்றில் விஜயகாந்த், அஜீத், சிம்பு படங்களைத் தவிர மற்ற படங்கள் திட்டமிட்டபடி காலைக் காட்சிக்கேரசிகர்களுக்கு விருந்தளித்து விட்டன. ஆனால் வல்லவன், வரலாறு, தர்மபுரி ஆகிய 3 படங்களும் ரிலீஸ் ஆவதில்பெரும் தாமதம் ஏற்பட்டது.

தர்மபுரி படத்தைத் தயாரித்துள்ளவர் ஏ.எம்.ரத்னம். அவரது பழைய கடன் பாக்கிக்காக கடைசி நேரத்தில் திடீர்பஞ்சாயத்து நடந்துள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. பல தடைகளைக்கடந்து ஒரு வழியாக பொட்டி தியேட்டர்களுக்கு வந்து சேருவதற்குள் மாலையாகி விட்டது. இதனால் மாலைக்காட்சி முதல்தான் தர்மபுரி திரையிடப்பட்டது.

இதேபோல வரலாறு படத்திற்கும் கடைசி நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இப்படத்தை முடித்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும், அஜீத்துக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள்ஏற்பட்டதால் படம் முடிந்தும் கூட வெளியிடுவதில் சிக்கல் நீடித்தது.

இந் நிலையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்பட்டு படத்தை தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வரமுடிவு செய்தபோது, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது சம்பளப் பாக்கி குறித்து பிரச்சினை எழுப்பினார்.இதனால் படத்தை திரையிடுவதில் கடைசி நேரத்தில் சிக்கல் எழுந்தது.

பின்னர் அது பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டதால் மாலைக் காட்சி முதல் வரலாறு தியேட்டர்களைசென்றடைந்தது.

இதேபோல ரீமா சென், நயனதாரா, சந்தியா நடித்த சிம்புவின் வல்லவன் படத்திற்கும் கடைசி நேரத்தில் சிக்கல்.இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர் பேசிய தொகையை விட குறைந்த தொகை கொடுக்க முன்வந்ததால், பிரிண்ட் போட தயாரிப்பாளர் தேனப்பன் மறுத்து விட்டார்.

இதனால் கடைசி நேர பெரும் சிக்கலை சந்தித்தது வல்லவன். பல்வேறு பேச்சுவார்த்தைகள், கெஞ்சல்கள்,சமாதானத்திற்குப் பின்னர் படச் சுருளை மும்பைக்கு எடுத்துச் சென்று பிரிண்ட் போட்டனர். அங்கிருந்து கொண்டுவருவதற்கு தாமதாகி விட்டதால், படத்தை ரிலீஸ் செய்ய மாலையாகி விட்டது.

இப்படி 3 முக்கியப் படங்களும் சொல்லி வைத்தாற் போல மாலைக் காட்சி முதலே திரையிடப்பட்டதால்,காலையிலிருந்தே தியேட்டர்களில் தேவுடு காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கடுப்பாகி ரகளையில் ஈடுபடஆரம்பித்தனர்.

இதையடுத்து பொட்டி வந்துரும், பொறுமையா இருங்கப்பா என்று போலீஸார் ரசிகர்களை முதலில்அன்பாகவும், பின்னர் அதட்டலாகவும் சமாதானப்படுத்தினர். ஒரு வழியாக தியேட்டர்களுக்கு பொட்டிகள்வந்தபோது ரசிகர்கள் படு குஷியாகி விசிலடித்து படப் பெட்டிகளை வரவேற்றனர்.

பிறகு படத்தை ஓடி, ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்பை முடிவுக்குகொண்டு வந்தனர் தியேட்டர்ஆபரேட்டர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil