twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளி படங்களின் வசூல் புஸ் வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக, தீபாவளிக்கு ரிலீஸ் ஆன புதிய படங்களின் வசூல்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தீபாவளியையொட்டி விஜய்யின் சிவகாசி, விக்ரமின் மஜா, தனுஷின் அது ஒரு கனாக்காலம், ஸ்ரீகாந்த்தின் பம்பரக்கண்ணாலே ஆகிய படங்கள் வெளியாயின.இந்தப் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் வசூலை அள்ளிவிடலாம் என்று திரையரங்கஉரிமையாளர்கள் ஆவலாக இருந்தனர்.ஆனால் மழை குறுக்கிட்டு அவர்களது எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டு விட்டது. தீபாவளிக்கு முன்பாகவேதொடங்கிய கன மழை நேற்று வரை தொடர்ந்தது. ஊரே வெள்ளக்காடானதால் திரையரங்குக்கு வரும் ரசிகர்களின்எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.மேலும் பல வட மாவட்டங்களில் தியேட்டர்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து படம் காட்டிவிட்டது. இதனால்தியேட்டர்கள் மூடப்பட்டன.தீபாவளியை முன்னிட்டு தினசரி 5 காட்சிகள் என்ற ரீதியில் புதிய படங்களை ஓட்டத் திட்டமிட்டிருந்தனர்திரையரங்க உரிமையாளர்கள். ஆனால் தற்போது கூட்டம் இல்லாத காரணத்தால், அவர்கள்சோகமடைந்துள்ளனர்.காலை மற்றும் பகல் நேரக் காட்சிகளுக்காவது எப்படியாவது கூட்டம் வந்துவிடுகிறதாம். அதே போல மாலைக்காட்சிக்கும் ஓரளவுக்கு ரசிகர்கள் வருகிறார்களாம். ஆனால் இரவு நேரக் காட்சிகள்தான் படு மோசமாக உள்ளதாம்.இரவில் மழையில் வீட்டை விட்டு மக்கள் அவ்வளவாக வெளியே வராமல் இருப்பதால் தியேட்டர்களுக்கு வரும்ஆட்களின் எண்ணிக்கையும் மிக சொற்பமாகவே உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரக் காட்சிகள் காற்று வாங்கி வருகின்றன.படங்களின் வசூலும் 25 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துவிட்டதாகவும் திரையரங்க உரிமையாளர்கள்கூறுகின்றனர். இதனால் வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டமாம்.இருப்பினும் ஒரு வழியாக இப்போது மழை ஓய்ந்து வருவதால் இனி மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளுக்குவரும் என்ற நம்பிக்கையுடன் வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர்.அதே நேரத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இல்லாததால் இந்தபடங்களின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

    By Staff
    |

    வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக, தீபாவளிக்கு ரிலீஸ் ஆன புதிய படங்களின் வசூல்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளியையொட்டி விஜய்யின் சிவகாசி, விக்ரமின் மஜா, தனுஷின் அது ஒரு கனாக்காலம், ஸ்ரீகாந்த்தின் பம்பரக்கண்ணாலே ஆகிய படங்கள் வெளியாயின.

    இந்தப் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் வசூலை அள்ளிவிடலாம் என்று திரையரங்கஉரிமையாளர்கள் ஆவலாக இருந்தனர்.


    ஆனால் மழை குறுக்கிட்டு அவர்களது எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டு விட்டது. தீபாவளிக்கு முன்பாகவேதொடங்கிய கன மழை நேற்று வரை தொடர்ந்தது. ஊரே வெள்ளக்காடானதால் திரையரங்குக்கு வரும் ரசிகர்களின்எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.

    மேலும் பல வட மாவட்டங்களில் தியேட்டர்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து படம் காட்டிவிட்டது. இதனால்தியேட்டர்கள் மூடப்பட்டன.

    தீபாவளியை முன்னிட்டு தினசரி 5 காட்சிகள் என்ற ரீதியில் புதிய படங்களை ஓட்டத் திட்டமிட்டிருந்தனர்திரையரங்க உரிமையாளர்கள். ஆனால் தற்போது கூட்டம் இல்லாத காரணத்தால், அவர்கள்சோகமடைந்துள்ளனர்.


    காலை மற்றும் பகல் நேரக் காட்சிகளுக்காவது எப்படியாவது கூட்டம் வந்துவிடுகிறதாம். அதே போல மாலைக்காட்சிக்கும் ஓரளவுக்கு ரசிகர்கள் வருகிறார்களாம். ஆனால் இரவு நேரக் காட்சிகள்தான் படு மோசமாக உள்ளதாம்.

    இரவில் மழையில் வீட்டை விட்டு மக்கள் அவ்வளவாக வெளியே வராமல் இருப்பதால் தியேட்டர்களுக்கு வரும்ஆட்களின் எண்ணிக்கையும் மிக சொற்பமாகவே உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரக் காட்சிகள் காற்று வாங்கி வருகின்றன.

    படங்களின் வசூலும் 25 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துவிட்டதாகவும் திரையரங்க உரிமையாளர்கள்கூறுகின்றனர். இதனால் வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டமாம்.


    இருப்பினும் ஒரு வழியாக இப்போது மழை ஓய்ந்து வருவதால் இனி மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளுக்குவரும் என்ற நம்பிக்கையுடன் வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர்.

    அதே நேரத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இல்லாததால் இந்தபடங்களின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X