For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜெயிக்கப் போவது யாரு? வரும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு ரஜினி, கமலின் படங்கள் ஏதும் திரைக்கு வரவில்லை.அதே நேரத்தில் விஜய்காந்த், விஜய், விக்ரம், தனுஷ் ஆகியோரின் படங்கள் வெள்ளித் திரையில் வெடிக்கவுள்ளன.கூடவே சேரனின் படமும் மேலும் இரண்டு படங்களும் தீபாவளிக்கு திரை காணப் போகின்றன.பேரரசு:வழக்கம்போல விஜய்காந்த் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ள படம் பேரரசு. விஜய்காந்த அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகுவெளியாகும் முதல் படம் இது.இதனால் இந்தப் படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகளை வைக்க இப்போதே அவரதுதொண்டர்கள் (முன்னாள் ரசிகர்கள்) தயாராகி வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை இப்போதே நடத்தஆரம்பித்துவிட்டன கட்சியின் அந்தந்தப் பகுதிக் கிளைகள்.இந்தப் படத்தை தயாரித்திருப்பது காஜா மைதீன். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற அதே காஜா மைதீன் தான். இந்தப்படத்துக்காக விஜய்காந்துக்கு ரூ. 1 கோடி சம்பள பாக்கியாம். இதை கேப்டன் கேட்டு நெருக்கியபோது, தன்னிடம் பைசா இல்லைஎன்று கண் கலங்கினாராம் காஜா.ரூ. 1 கோடியை விட்டுத் தந்து...மேலும் இந்தப் படம் வெளியானால் தான் என்னால் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை எடுக்கவே முடியும்என்றாராம். இதையடுத்து ரூ. 1 கோடியை விட்டுக் கொடுத்துவிட்டு டப்பிங் பேசினாராம் விஜய்காந்த்.இந்தப் படத்துக்கு காஜா மைதீனை நம்பாமல் தானே விளம்பரங்களை கவனித்து வருகிறார் கேப்டன்.இதில் அவருக்கு ஹீரோயின் தாமினி. தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் மர்மமான முறையில் இறப்பது குறித்து சிபிஐக்கு வரும்வழக்கை விசாரிக்கிறாராம் விஜய்காந்த். படத்தை இயக்கியிருப்பது உதயன்.சிவகாசி:தீபாவளிக்கு வரப் போகும் படங்களில் முக்கியமானது விஜய் நடித்துள்ள சிவகாசி. இதில் ஹீரோயின் ஆசின்.கில்லியில் ஆரம்பித்து தொடர்ந்து அதிரடியாக ஹிட்களைத் தந்து வருகிறார் விஜய். இதனால் அவரது மார்க்கெட் பெரும்உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியாகிறது இந்தப் படம்.இதில் மெக்கானிக் வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய். மேலும் தாய் -மகன் சென்டிமெண்ட் எல்லாம் கலந்து தந்திருக்கிறார்இயக்குனர் பேரரசு.தயாரிப்பு ஏ.எம்.ரத்னம். இதனால் படத்தை மிகப் பிரமாண்டமான செலவில் எடுத்திருக்கிறார்கள். மெக்கானிக் தான் என்றாலும்டூயட்டை விஜய் சுவிட்சர்லாந்தில் தான் பாடியிருக்கிறார். வழக்கமான ஆக்ஷனுடன் காமெடியிலும் கலக்கியிருக்கிறாராம் விஜய்.வழக்கமான விஜய் படம்.மஜா:படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்டி வரும் விக்ரமின் மஜாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்நியனின்அபாரமான வெற்றிக்குப் பின் மைனர் வேடத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இது. இதிலும் ஹீரோயின் ஆசின் தான்.கன்னடத் திரையுலகின் மிகப் பெரிய தயாரிப்பாளரான ராக்லைன் வெங்டேஷ் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரு மலையாளரீ-மேக். தொம்மனும் மக்களும் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி பெரும் வெற்றி பெறச் செய்த இயக்குனர் ஷாபி அதையேதமிழில் எடுத்துள்ளார்.காரைக்குடி பக்கமே முழு சூட்டிங்கையும் நடத்தி முடித்திருக்கிறார். மதமதவென ஊர் பக்கத்தில் திரியும் மைனர் ஒருவனின்காதல்-ஆக்ஷன் கதையாம். முழுக்க முழுக்க வேட்டி, பூப்போட்ட சட்டைகளில் நடித்து முடித்திருக்கிறார் விக்ரம்.கனவுக் காட்சிகளில் வரும் சூயட்டுக்கு மட்டுமே வேட்டிக்கு விடுதலையாம்.அது ஒரு கனாக் காலம்:பாலு மகேந்திரா ரொம்ப காலமாக எடுத்து வரும் படம் இது. தொடர் தோல்விகள் ஏற்பட்டாலும், உடல் நிலையில் பாதிப்புஇருந்தாலும் அதையெல்லாம் ஒரு பக்கமாக கடாசிவிட்டு தனது வழக்கமான கிரியேட்டிவ் மூளையுடன் பாலு எடுத்திருக்கும்படம்.தனது இளமைக் காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களையும் கலந்து படமாகத் தந்திருக்கிறார்.தொடர்ந்து தோல்விகளைத் தந்து வரும் தனுஷ் ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருக்கும் படம் இது. ஒரு வேலைக்காரப்பெண்ணின் மகளுக்கும் அவர் வேலை பார்க்கும் வீட்டு விடலைப் பையனுக்கும் இடையே முளைக்கும் காதல் தான் கதை.இந்த ரோலில் ப்ரியாமணியும் தனுசும் நடித்திருக்கிறார்கள். கூடவே தேஜாஸ்ரீயும் இருக்கிறார்.காதலை பல நேரங்களில் காமம் வெல்லும் காட்சிகள் ஏராளமாய் உள்ளதாய் ப்ரியாமணியும் தேஜாஸ்ரீயும் மிக தாராளமாய்நடித்துள்ள படம்.கவர்ச்சி மிக தூக்கல் என்றாலும் கதையை வைத்து அதை அழகாக மூடித் தருபவர் பாலு மகேந்திரா. இதனால் இந்தப் படத்துக்கும்ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.தவமாய் தவமிருந்து...விஜய்காந்த், விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்கள் களமிறங்கும்போது தானும் மிக தைரியமாய் தீபாவளிக்குபடத்தை ரிலீஸ் செய்கிறார் சேரன். காரணம் படத்தின் கதையில் உள்ள ஆழம் மற்றும் படம் வந்திருக்கும் விதம்.ஆட்டோகிராப்பின் மகா வெற்றிக்குப் பின் சேரனே நடித்து, இயக்கியிருக்கும் படம் இது. இதில் ஹீரோயினாக கேரளத்தில் இருந்துபத்மப்ரியா என்ற அட்டகாசமான நடிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.ராஜ்கிரண் உள்பட மிகச் சிறந்த நடிகர்களைக் கொண்டு சேரன் செதுக்கியுள்ள இன்னொரு மகா சித்திரம் இது என்கிறார்கள்.தந்தை-மகன் இடையிலான சிக்கல் கலந்த உறவை சித்தரிக்கும் படமாம். சேரனுக்குத் தந்தையாக ராஜ்கிரண்அசத்தியிருக்கிறாராம்.தனது டைரக்ஷன் திறமையால் நம்மை மீண்டும் ஒரு முறை உலுக்கப் போகிறார் சேரன் என்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு வரும்படங்களிலேயே மிக அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் தவமாய் தவமிருந்து தான்.விஜய், விக்ரம் படங்களுக்கு இணையாக இந்தப் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் இடையே நடந்த பெரும் போட்டியேஇதற்கு சாட்சி. மிக நல்ல விலைக்குப் போயிருக்கிறதாம் தவமாய் தவமிருந்து.ஜூன் ஆர்:இப்படி மெகா நடிகர்கள், பாலு மகேந்திரா, சேரன் ஆகிய மகா டைரக்டர்கள் போட்டியில் உள்ள நிலையில் ரொம்ப மனதைரியத்துடன் இன்னொரு படமும் வெளியாகிறது. அது ஜூன் ஆர்.கேரளத்தைச் சேர்ந்த பெண்ணியக்கவாதியான ரேவதி வெர்மா இயக்கியுள்ள படம் இது. ஜோதிகா தான் ஹீரோயின்.ஹீரோவெல்லாம் யாரும் இல்லை. இதனால் ரொம்பப் பெரிய செலவும் இல்லை.குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த கதையுடன் வெளியாகும் படமாம். ஆனால், படத்தில் குஷ்பு இருப்பதால் படத்தை வாங்கிய பலவினியோகஸ்தர்களும் பாமக-விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பயந்து படத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் படம் ஓடுமா என்பதே சந்தேகம் தான் என்ற தெளிவான முடிவில் இருக்கும் தியேட்டர்காரர்கள் குஷ்பு ரிஸ்கை எடுத்துகண்ணாடி உடைபட்டு திரை கிழிவதை விரும்பவில்லை. இதனால் அவர்கள் படம் வேண்டாம் என்று வினியோகஸ்தர்களுக்குகும்பிடு போட்டுவிட்டார்களாம்.இதனால் இயக்குனர் டென்சனில் அலைவதாகக் கேள்வி. சொந்தம்னு சொல்லிக்க ரத்த சம்பந்தம் தேவையில்லை என்று ஒருகருவை வைத்துக் கொண்டு ஓவர் அறிவாளித்தனமான வியாக்கியானம் பேசுகிறதாம் படம். இதில் ஜோதிகாவுக்காக சூர்யாசும்மா சில காட்சிகளில் தலை காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.படம் வெளியானால் தெரியும், வெளியானால்...தாதா வீரமணியின் கதை: பெரிசுஇப்படியாபட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் எண்கெளன்டரில் போட்டுத் தள்ளப்பட்ட சென்னை தாதா வீரமணியின்கதையுடன் ஒரு படம் வெளியாகிறது. படத்தின் பெயர் பெரிசு.இதில் வீரமணியை ஏதோ ஊருக்கு உழைப்பன் போலக் காட்டியிருக்கிறார்களாம். இதனால் முக்கிய போலீஸ் தலைகள் கடுப்போடுபார்த்துக் கொண்டிருக்க இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் மது என்பவர் தான் வீரமணி கேரக்டரில் நடித்துள்ளார்.ஹீரோயினா நீத்தா என்பவரை அறிமுகப்படுத்துகிறார்கள். இயக்சியவர் ஜி.கே.படத்தில் வீரமணி கோஷம் ஓவராக இருந்தால் படத்துக்கு தடை வாங்கவும் காவல்துறை தரப்பு தயாராவதாய் சொல்கிறார்கள்.நீபா நன்றாகவே கிளாமர் காட்டியிருக்கிறார் என்பது அடிசனல் செய்தி.வெல்லப் போவது எந்தப் படமோ?

  By Staff
  |

  வரும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு ரஜினி, கமலின் படங்கள் ஏதும் திரைக்கு வரவில்லை.

  அதே நேரத்தில் விஜய்காந்த், விஜய், விக்ரம், தனுஷ் ஆகியோரின் படங்கள் வெள்ளித் திரையில் வெடிக்கவுள்ளன.

  கூடவே சேரனின் படமும் மேலும் இரண்டு படங்களும் தீபாவளிக்கு திரை காணப் போகின்றன.

  பேரரசு:


  வழக்கம்போல விஜய்காந்த் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ள படம் பேரரசு. விஜய்காந்த அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகுவெளியாகும் முதல் படம் இது.

  இதனால் இந்தப் படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகளை வைக்க இப்போதே அவரதுதொண்டர்கள் (முன்னாள் ரசிகர்கள்) தயாராகி வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை இப்போதே நடத்தஆரம்பித்துவிட்டன கட்சியின் அந்தந்தப் பகுதிக் கிளைகள்.

  இந்தப் படத்தை தயாரித்திருப்பது காஜா மைதீன். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற அதே காஜா மைதீன் தான். இந்தப்படத்துக்காக விஜய்காந்துக்கு ரூ. 1 கோடி சம்பள பாக்கியாம். இதை கேப்டன் கேட்டு நெருக்கியபோது, தன்னிடம் பைசா இல்லைஎன்று கண் கலங்கினாராம் காஜா.

  ரூ. 1 கோடியை விட்டுத் தந்து...

  மேலும் இந்தப் படம் வெளியானால் தான் என்னால் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை எடுக்கவே முடியும்என்றாராம். இதையடுத்து ரூ. 1 கோடியை விட்டுக் கொடுத்துவிட்டு டப்பிங் பேசினாராம் விஜய்காந்த்.

  இந்தப் படத்துக்கு காஜா மைதீனை நம்பாமல் தானே விளம்பரங்களை கவனித்து வருகிறார் கேப்டன்.

  இதில் அவருக்கு ஹீரோயின் தாமினி. தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் மர்மமான முறையில் இறப்பது குறித்து சிபிஐக்கு வரும்வழக்கை விசாரிக்கிறாராம் விஜய்காந்த். படத்தை இயக்கியிருப்பது உதயன்.

  சிவகாசி:


  தீபாவளிக்கு வரப் போகும் படங்களில் முக்கியமானது விஜய் நடித்துள்ள சிவகாசி. இதில் ஹீரோயின் ஆசின்.

  கில்லியில் ஆரம்பித்து தொடர்ந்து அதிரடியாக ஹிட்களைத் தந்து வருகிறார் விஜய். இதனால் அவரது மார்க்கெட் பெரும்உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியாகிறது இந்தப் படம்.

  இதில் மெக்கானிக் வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய். மேலும் தாய் -மகன் சென்டிமெண்ட் எல்லாம் கலந்து தந்திருக்கிறார்இயக்குனர் பேரரசு.

  தயாரிப்பு ஏ.எம்.ரத்னம். இதனால் படத்தை மிகப் பிரமாண்டமான செலவில் எடுத்திருக்கிறார்கள். மெக்கானிக் தான் என்றாலும்டூயட்டை விஜய் சுவிட்சர்லாந்தில் தான் பாடியிருக்கிறார். வழக்கமான ஆக்ஷனுடன் காமெடியிலும் கலக்கியிருக்கிறாராம் விஜய்.வழக்கமான விஜய் படம்.

  மஜா:


  படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்டி வரும் விக்ரமின் மஜாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்நியனின்அபாரமான வெற்றிக்குப் பின் மைனர் வேடத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இது. இதிலும் ஹீரோயின் ஆசின் தான்.

  கன்னடத் திரையுலகின் மிகப் பெரிய தயாரிப்பாளரான ராக்லைன் வெங்டேஷ் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரு மலையாளரீ-மேக். தொம்மனும் மக்களும் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி பெரும் வெற்றி பெறச் செய்த இயக்குனர் ஷாபி அதையேதமிழில் எடுத்துள்ளார்.

  காரைக்குடி பக்கமே முழு சூட்டிங்கையும் நடத்தி முடித்திருக்கிறார். மதமதவென ஊர் பக்கத்தில் திரியும் மைனர் ஒருவனின்காதல்-ஆக்ஷன் கதையாம். முழுக்க முழுக்க வேட்டி, பூப்போட்ட சட்டைகளில் நடித்து முடித்திருக்கிறார் விக்ரம்.

  கனவுக் காட்சிகளில் வரும் சூயட்டுக்கு மட்டுமே வேட்டிக்கு விடுதலையாம்.

  அது ஒரு கனாக் காலம்:


  பாலு மகேந்திரா ரொம்ப காலமாக எடுத்து வரும் படம் இது. தொடர் தோல்விகள் ஏற்பட்டாலும், உடல் நிலையில் பாதிப்புஇருந்தாலும் அதையெல்லாம் ஒரு பக்கமாக கடாசிவிட்டு தனது வழக்கமான கிரியேட்டிவ் மூளையுடன் பாலு எடுத்திருக்கும்படம்.

  தனது இளமைக் காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களையும் கலந்து படமாகத் தந்திருக்கிறார்.

  தொடர்ந்து தோல்விகளைத் தந்து வரும் தனுஷ் ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருக்கும் படம் இது. ஒரு வேலைக்காரப்பெண்ணின் மகளுக்கும் அவர் வேலை பார்க்கும் வீட்டு விடலைப் பையனுக்கும் இடையே முளைக்கும் காதல் தான் கதை.

  இந்த ரோலில் ப்ரியாமணியும் தனுசும் நடித்திருக்கிறார்கள். கூடவே தேஜாஸ்ரீயும் இருக்கிறார்.

  காதலை பல நேரங்களில் காமம் வெல்லும் காட்சிகள் ஏராளமாய் உள்ளதாய் ப்ரியாமணியும் தேஜாஸ்ரீயும் மிக தாராளமாய்நடித்துள்ள படம்.

  கவர்ச்சி மிக தூக்கல் என்றாலும் கதையை வைத்து அதை அழகாக மூடித் தருபவர் பாலு மகேந்திரா. இதனால் இந்தப் படத்துக்கும்ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

  தவமாய் தவமிருந்து...


  விஜய்காந்த், விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்கள் களமிறங்கும்போது தானும் மிக தைரியமாய் தீபாவளிக்குபடத்தை ரிலீஸ் செய்கிறார் சேரன். காரணம் படத்தின் கதையில் உள்ள ஆழம் மற்றும் படம் வந்திருக்கும் விதம்.

  ஆட்டோகிராப்பின் மகா வெற்றிக்குப் பின் சேரனே நடித்து, இயக்கியிருக்கும் படம் இது. இதில் ஹீரோயினாக கேரளத்தில் இருந்துபத்மப்ரியா என்ற அட்டகாசமான நடிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

  ராஜ்கிரண் உள்பட மிகச் சிறந்த நடிகர்களைக் கொண்டு சேரன் செதுக்கியுள்ள இன்னொரு மகா சித்திரம் இது என்கிறார்கள்.தந்தை-மகன் இடையிலான சிக்கல் கலந்த உறவை சித்தரிக்கும் படமாம். சேரனுக்குத் தந்தையாக ராஜ்கிரண்அசத்தியிருக்கிறாராம்.

  தனது டைரக்ஷன் திறமையால் நம்மை மீண்டும் ஒரு முறை உலுக்கப் போகிறார் சேரன் என்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு வரும்படங்களிலேயே மிக அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் தவமாய் தவமிருந்து தான்.

  விஜய், விக்ரம் படங்களுக்கு இணையாக இந்தப் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் இடையே நடந்த பெரும் போட்டியேஇதற்கு சாட்சி. மிக நல்ல விலைக்குப் போயிருக்கிறதாம் தவமாய் தவமிருந்து.

  ஜூன் ஆர்:


  இப்படி மெகா நடிகர்கள், பாலு மகேந்திரா, சேரன் ஆகிய மகா டைரக்டர்கள் போட்டியில் உள்ள நிலையில் ரொம்ப மனதைரியத்துடன் இன்னொரு படமும் வெளியாகிறது. அது ஜூன் ஆர்.

  கேரளத்தைச் சேர்ந்த பெண்ணியக்கவாதியான ரேவதி வெர்மா இயக்கியுள்ள படம் இது. ஜோதிகா தான் ஹீரோயின்.ஹீரோவெல்லாம் யாரும் இல்லை. இதனால் ரொம்பப் பெரிய செலவும் இல்லை.

  குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த கதையுடன் வெளியாகும் படமாம். ஆனால், படத்தில் குஷ்பு இருப்பதால் படத்தை வாங்கிய பலவினியோகஸ்தர்களும் பாமக-விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பயந்து படத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  இந்தப் படம் ஓடுமா என்பதே சந்தேகம் தான் என்ற தெளிவான முடிவில் இருக்கும் தியேட்டர்காரர்கள் குஷ்பு ரிஸ்கை எடுத்துகண்ணாடி உடைபட்டு திரை கிழிவதை விரும்பவில்லை. இதனால் அவர்கள் படம் வேண்டாம் என்று வினியோகஸ்தர்களுக்குகும்பிடு போட்டுவிட்டார்களாம்.

  இதனால் இயக்குனர் டென்சனில் அலைவதாகக் கேள்வி. சொந்தம்னு சொல்லிக்க ரத்த சம்பந்தம் தேவையில்லை என்று ஒருகருவை வைத்துக் கொண்டு ஓவர் அறிவாளித்தனமான வியாக்கியானம் பேசுகிறதாம் படம். இதில் ஜோதிகாவுக்காக சூர்யாசும்மா சில காட்சிகளில் தலை காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.

  படம் வெளியானால் தெரியும், வெளியானால்...

  தாதா வீரமணியின் கதை: பெரிசு


  இப்படியாபட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் எண்கெளன்டரில் போட்டுத் தள்ளப்பட்ட சென்னை தாதா வீரமணியின்கதையுடன் ஒரு படம் வெளியாகிறது. படத்தின் பெயர் பெரிசு.

  இதில் வீரமணியை ஏதோ ஊருக்கு உழைப்பன் போலக் காட்டியிருக்கிறார்களாம். இதனால் முக்கிய போலீஸ் தலைகள் கடுப்போடுபார்த்துக் கொண்டிருக்க இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் மது என்பவர் தான் வீரமணி கேரக்டரில் நடித்துள்ளார்.

  ஹீரோயினா நீத்தா என்பவரை அறிமுகப்படுத்துகிறார்கள். இயக்சியவர் ஜி.கே.

  படத்தில் வீரமணி கோஷம் ஓவராக இருந்தால் படத்துக்கு தடை வாங்கவும் காவல்துறை தரப்பு தயாராவதாய் சொல்கிறார்கள்.நீபா நன்றாகவே கிளாமர் காட்டியிருக்கிறார் என்பது அடிசனல் செய்தி.

  வெல்லப் போவது எந்தப் படமோ?

   Read more about: diwali tamil movies
   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X