»   »  சங்கட தியா!

சங்கட தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுவரை இல்லாத பெரும் குழப்பத்தில் இருக்கிறார் தியா. பின்னே, கல்யாணமாகிப்போகும் நேரத்தில் மளமளவென பட வாய்ப்புகள் வந்தால் குழப்பம் வராதா, என்ன!

தியா சினிமாவுக்கு வந்த புதிதில் அவரது மதமத கவர்ச்சிக்கு ரசிகர்களிடையேஆரவார வரவேற்பு கிடைத்தது. அவரும் அதகளம் பண்ணத் தயாராகத்தான் இருந்தார்.ஆனால் நேரம் சரியில்லையோ என்னவோ, அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள்வரவில்லை.

தியாவும் சான்ஸ் பிடிக்க என்னென்னவோ செய்துதான் பார்த்தார். அப்படியும் ஓரிருவாய்ப்புகளே வந்தன. என்னதான் கிளாமர் சீரும், சிறப்பாக இருந்தாலும்கொஞ்சமாச்சும் நடிச்சாதானே என்று கோலிவுட்டில் தியா பற்றிப் பேச்சு கிளம்பியது.

இதனால் அப்செட் ஆன தியா, நடிப்புக்கேற்ற மாதிரியான படங்களை தேர்வு செய்துநடித்துப் பார்த்தார். அப்படி நடித்த படங்கள்தான் கற்க கசடற, கோடம்பாக்கம்ஆகியவை. அப்படியும் தேறியபாடில்லை.

வெறுத்துப் போன தியா, பேசாமல் கல்யாணம் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வர,வீட்டாரும் சட்டுப்புட்டென டேட்ஸ் குறிக்க களேபரமாகி விட்டது கோடம்பாக்கம்.தியாவுக்கு கல்யாணமாம் என்று பரவிய தகவல், பல தயாரிப்பாளர்களை திடீரெனஉசுப்பேத்தி விட்டு விட்டது.

தியாவைத் தேடி ஓடி வந்த அவர்கள் எங்க படத்தில் நடித்து முடித்து விட்டு போங்கஎன்று வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்களாம். நான்கு புதிய பட வாய்ப்புகள்வந்துள்ளதால் குழம்பிப் போயுள்ளாராம் தியா.

கல்யாணம் செய்து கொள்ளப் போவதால் கையில் இருக்கும் படங்களை வேகமாகமுடித்துக் கொடுத்து வருகிறார் தியா. இதில் லெமன் படம் அதிகஎதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. இப்படத்தில் தியாவின் நடிப்பு அபாரமாகஇருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளதால் தியாவும் படு சந்தோஷமாக உள்ளார்.

இதுதான் இப்போது சிக்கலுக்கும் வழி வகுத்து விட்டது. லெமன் படத்தில் தியாசிறப்பாக நடித்திருப்பதாக பேசப்படுவதால் அவரைத் தங்களது படத்தில் நடிக்கவைக்க தயாரிப்பாளர்களிடையே புதிய ஆர்வம் கிளம்பியுள்ளது.

ஆனால் தியாவோ பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். பூத்திருந்து, காத்திருந்துபார்த்தபோது ஒரு வாய்ப்பும் வரவில்லை, இப்போது இப்படி மொய்க்கிறார்களேஎன்று குழப்பமாக உள்ளதாம் தியாவுக்கு.

அவருக்கு நெருக்கமானவர்கள், படங்களை ஒத்துக் கொள், ஆத்துக்காரரின்பெர்மிஷன் வாங்கி நடித்துக் கொடு என்கிறார்களாம். ஆனால் சைக்காலஜி படித்ததியாவோ, ஏன் இந்த திடீர் வேகம் என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளாராம்.

Read more about: actress diyas confusion

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil