பூ மனசு தியா! மல்லிகைப் பூ போல பள பளவென இருக்கும் தியாவுக்கு, மனசும் பூ மாதிரி மென்மை தான். திரையில் தித்திக்க வைக்கும் நடிப்பைக் கொடுக்கும் சில நடிகைகள், திரைக்குப் பின்னே பல நல்ல காரியங்களைசெய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.பூஜா, தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அனாதை இல்லங்களுக்குக் கொடுத்து விடுகிறார். நமீதாவும்அப்படித்தான் இளகிய மனம் படைத்தவர். சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு உதவினார்.இந்த வரிசையில் சேர்ந்துள்ளார் தியா. நல்ல விஷயம் ஒன்றை செய்து வாயாற வாழ்த்தைப் பெற்றுள்ளார் தியா.சென்னை அணணாசாலையில் லிட்டில் பிளவர் என்ற கான்வென்ட் பள்ளி உள்ளது. இங்கு வாய் பேச முடியாத,காது கேளாத சிறுவர்-சிறுமியர் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு படிபபு தவிர கலை, கைவினைப் பொருள் தயாரிப்பிலும் ஊக்கம் அளிக்கப்படவுள்ளது. இதற்கானதொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தியாதான் சீப் கெஸ்ட். சும்மா வந்தோம் போனோம் என்று இல்லாமல் அந்தக் குழந்தைகளோடு கூடிப் பழகி அவர்களை மகிழ்வித்தார்.அழகிய தியாவுக்கு, பள்ளிக் குழந்தைகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட அதை கண்கலங்க ஏற்றுக்கொண்ட தியா, தன் பங்குக்கு தானும் இனிப்புகளை வழங்கினார்.நெடு நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியில் தியா முழுவதுமாய் பங்கேற்றார். அந்தக் குழந்தைகளின் சிரமங்கள்,கஷ்டங்களை பார்த்தபோது தியாவின் விழிகளில் அவ்வப்போது ஈரம் எட்டிப் பார்த்தது.செவியில் கருவிகள் பொறுத்தப்பட்ட அந்தக் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசிய தியா, அவர்களுக்கு பலஅறிவுரைகளை வழங்கினார். தன்னம்பிக்கையூட்டும் தியாவின் பேச்சால் அந்தக் குழந்தைகளுக்கும் பெரும்சந்தோஷம்.நானும் பேஷன் டெக்னாலஜி படித்துள்ளேன், அழகுக் கலை படித்துள்ளேன். தேவைப்பட்டால் இவர்களுக்குஇலவசமாய் அதை சொல்லிக் கொடுக்க நான் தயார் என தொண்டை கமற தியா சொன்னபோது குழந்தைகளின்கைத்தட்டலும் சந்தோஷ கூச்சலும் பள்ளி வளாகத்தை திணறடித்தது.தியாவை பள்ளிக் குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடித்துப் போய் விட்டதுபோலும், அவரை சுற்றிச் சுற்றி வந்து,கையைப் பிடித்து, கன்னத்தைத் தடவி, சுற்றி உட்கார்ந்து அரட்டை அடித்து மகிழ்த்தனர்.ஆளாளுக்கு கேள்வி கேட்டு தியாவை துளைத்தெடுக்க மிக மிக பொறுமையாய் பதில் சொல்லி அவர்களோடுகரைந்து போனார் தியா.நீண்ட நேரம் அவர்களோடு பொழுது போக்கிவிட்டு கிளம்பிய தியாவின் கண்களில் ஈரம், அதைப் பார்த்துஅந்தக் குழந்தைகள் கண்களிலும் ஈரம்.கேக்கவே சந்தோஷமா இருக்குல்ல.சூப்பர் தியா..
மல்லிகைப் பூ போல பள பளவென இருக்கும் தியாவுக்கு, மனசும் பூ மாதிரி மென்மை தான்.
திரையில் தித்திக்க வைக்கும் நடிப்பைக் கொடுக்கும் சில நடிகைகள், திரைக்குப் பின்னே பல நல்ல காரியங்களைசெய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.பூஜா, தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அனாதை இல்லங்களுக்குக் கொடுத்து விடுகிறார். நமீதாவும்அப்படித்தான் இளகிய மனம் படைத்தவர். சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு உதவினார்.
இந்த வரிசையில் சேர்ந்துள்ளார் தியா. நல்ல விஷயம் ஒன்றை செய்து வாயாற வாழ்த்தைப் பெற்றுள்ளார் தியா.
சென்னை அணணாசாலையில் லிட்டில் பிளவர் என்ற கான்வென்ட் பள்ளி உள்ளது. இங்கு வாய் பேச முடியாத,காது கேளாத சிறுவர்-சிறுமியர் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு படிபபு தவிர கலை, கைவினைப் பொருள் தயாரிப்பிலும் ஊக்கம் அளிக்கப்படவுள்ளது. இதற்கானதொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தியாதான் சீப் கெஸ்ட்.
சும்மா வந்தோம் போனோம் என்று இல்லாமல் அந்தக் குழந்தைகளோடு கூடிப் பழகி அவர்களை மகிழ்வித்தார்.அழகிய தியாவுக்கு, பள்ளிக் குழந்தைகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட அதை கண்கலங்க ஏற்றுக்கொண்ட தியா, தன் பங்குக்கு தானும் இனிப்புகளை வழங்கினார்.
நெடு நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியில் தியா முழுவதுமாய் பங்கேற்றார். அந்தக் குழந்தைகளின் சிரமங்கள்,கஷ்டங்களை பார்த்தபோது தியாவின் விழிகளில் அவ்வப்போது ஈரம் எட்டிப் பார்த்தது.
செவியில் கருவிகள் பொறுத்தப்பட்ட அந்தக் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசிய தியா, அவர்களுக்கு பலஅறிவுரைகளை வழங்கினார். தன்னம்பிக்கையூட்டும் தியாவின் பேச்சால் அந்தக் குழந்தைகளுக்கும் பெரும்சந்தோஷம்.
நானும் பேஷன் டெக்னாலஜி படித்துள்ளேன், அழகுக் கலை படித்துள்ளேன். தேவைப்பட்டால் இவர்களுக்குஇலவசமாய் அதை சொல்லிக் கொடுக்க நான் தயார் என தொண்டை கமற தியா சொன்னபோது குழந்தைகளின்கைத்தட்டலும் சந்தோஷ கூச்சலும் பள்ளி வளாகத்தை திணறடித்தது.தியாவை பள்ளிக் குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடித்துப் போய் விட்டதுபோலும், அவரை சுற்றிச் சுற்றி வந்து,கையைப் பிடித்து, கன்னத்தைத் தடவி, சுற்றி உட்கார்ந்து அரட்டை அடித்து மகிழ்த்தனர்.
ஆளாளுக்கு கேள்வி கேட்டு தியாவை துளைத்தெடுக்க மிக மிக பொறுமையாய் பதில் சொல்லி அவர்களோடுகரைந்து போனார் தியா.
நீண்ட நேரம் அவர்களோடு பொழுது போக்கிவிட்டு கிளம்பிய தியாவின் கண்களில் ஈரம், அதைப் பார்த்துஅந்தக் குழந்தைகள் கண்களிலும் ஈரம்.
கேக்கவே சந்தோஷமா இருக்குல்ல.
சூப்பர் தியா..


Click it and Unblock the Notifications