»   »  தியா டீச்சர் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகும் தியா, கல்யாணத்திற்குப் பிறகுநடனக் கலையில் புகுந்து தனது முழுத் திறமையையும் காட்டத் திட்டமிட்டுள்ளார்.பொட்டியிலிருந்து வெளியே எடுத்த புத்தம் புதுகுச்சி ஐஸ் போல குளிர் நாயகிதியாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஒருவருக்கும் கல்யாணம்முடிவாகி உள்ளது.சட்டுப்புட்டென்று இந்த கல்யாணத்தை இரு வீட்டாரும் முடிவு செய்தார்களாம்.தியாவுக்கு சரியானபடி பட வாய்ப்பு இல்லாததாலும், தியாவைப் பற்றி ஏகப்பட்டவதந்திகள் குண்டக்க மண்டக்க பரவியதாலும்தான் இந்த முடிவுக்கு வந்தார்களாம்தியாவைப் பெற்றவர்கள்.கல்யாணக் களை முகத்தில் பரவ கை பிடிக்கப் போகிறவருடன் கடலை போட்டவண்ணம் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் தியா. ஆனால் அவர் நடித்துக்கொண்டிருந்த சில படங்கள் தியா டிமிக்கி கொடுப்பதால் பாதியில் முடங்கிப் போய்க்கிடக்கின்றன.கல்யாணத்தை முடித்து விட்டு இந்தப் படங்களில் நடித்துத் தருவதாக தியாஉறுதியளித்துள்ளாராம். வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா என்பது தெரியவில்லை.கல்யாணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லப் போகும் தியா, புதுஅவென்யூ ஒன்றில் கால் பதிக்க உள்ளார். அதாவது நடிப்பைத் துறக்கும் தியா,நடனத்திற்கு வெல்கம் சொல்லப் போகிறார்.இதற்காக ஒரு பள்ளிக் கூடத்தை சென்னையில் திறக்கப் போகிறாராம்.சென்னை கலாஷேத்திராவில் பரதம் பயின்றவர் தியா என்பது தெரியும்தானே?தனக்குத் தெரிந்த நடனம், தன்னோடு முடங்கி விடாமல் பலருக்கும் கற்பித்து நல்லவாத்தியாராக விளங்க ஆசையாக உள்ளார் தியா.தியாவின் வருங்கால வாத்தியாரும் இதற்கு ஓ.கே. சொல்லி விட்டாராம்.

தியா டீச்சர் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகும் தியா, கல்யாணத்திற்குப் பிறகுநடனக் கலையில் புகுந்து தனது முழுத் திறமையையும் காட்டத் திட்டமிட்டுள்ளார்.பொட்டியிலிருந்து வெளியே எடுத்த புத்தம் புதுகுச்சி ஐஸ் போல குளிர் நாயகிதியாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஒருவருக்கும் கல்யாணம்முடிவாகி உள்ளது.சட்டுப்புட்டென்று இந்த கல்யாணத்தை இரு வீட்டாரும் முடிவு செய்தார்களாம்.தியாவுக்கு சரியானபடி பட வாய்ப்பு இல்லாததாலும், தியாவைப் பற்றி ஏகப்பட்டவதந்திகள் குண்டக்க மண்டக்க பரவியதாலும்தான் இந்த முடிவுக்கு வந்தார்களாம்தியாவைப் பெற்றவர்கள்.கல்யாணக் களை முகத்தில் பரவ கை பிடிக்கப் போகிறவருடன் கடலை போட்டவண்ணம் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் தியா. ஆனால் அவர் நடித்துக்கொண்டிருந்த சில படங்கள் தியா டிமிக்கி கொடுப்பதால் பாதியில் முடங்கிப் போய்க்கிடக்கின்றன.கல்யாணத்தை முடித்து விட்டு இந்தப் படங்களில் நடித்துத் தருவதாக தியாஉறுதியளித்துள்ளாராம். வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா என்பது தெரியவில்லை.கல்யாணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லப் போகும் தியா, புதுஅவென்யூ ஒன்றில் கால் பதிக்க உள்ளார். அதாவது நடிப்பைத் துறக்கும் தியா,நடனத்திற்கு வெல்கம் சொல்லப் போகிறார்.இதற்காக ஒரு பள்ளிக் கூடத்தை சென்னையில் திறக்கப் போகிறாராம்.சென்னை கலாஷேத்திராவில் பரதம் பயின்றவர் தியா என்பது தெரியும்தானே?தனக்குத் தெரிந்த நடனம், தன்னோடு முடங்கி விடாமல் பலருக்கும் கற்பித்து நல்லவாத்தியாராக விளங்க ஆசையாக உள்ளார் தியா.தியாவின் வருங்கால வாத்தியாரும் இதற்கு ஓ.கே. சொல்லி விட்டாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகும் தியா, கல்யாணத்திற்குப் பிறகுநடனக் கலையில் புகுந்து தனது முழுத் திறமையையும் காட்டத் திட்டமிட்டுள்ளார்.

பொட்டியிலிருந்து வெளியே எடுத்த புத்தம் புதுகுச்சி ஐஸ் போல குளிர் நாயகிதியாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஒருவருக்கும் கல்யாணம்முடிவாகி உள்ளது.

சட்டுப்புட்டென்று இந்த கல்யாணத்தை இரு வீட்டாரும் முடிவு செய்தார்களாம்.தியாவுக்கு சரியானபடி பட வாய்ப்பு இல்லாததாலும், தியாவைப் பற்றி ஏகப்பட்டவதந்திகள் குண்டக்க மண்டக்க பரவியதாலும்தான் இந்த முடிவுக்கு வந்தார்களாம்தியாவைப் பெற்றவர்கள்.

கல்யாணக் களை முகத்தில் பரவ கை பிடிக்கப் போகிறவருடன் கடலை போட்டவண்ணம் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் தியா. ஆனால் அவர் நடித்துக்கொண்டிருந்த சில படங்கள் தியா டிமிக்கி கொடுப்பதால் பாதியில் முடங்கிப் போய்க்கிடக்கின்றன.

கல்யாணத்தை முடித்து விட்டு இந்தப் படங்களில் நடித்துத் தருவதாக தியாஉறுதியளித்துள்ளாராம். வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா என்பது தெரியவில்லை.

கல்யாணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லப் போகும் தியா, புதுஅவென்யூ ஒன்றில் கால் பதிக்க உள்ளார். அதாவது நடிப்பைத் துறக்கும் தியா,நடனத்திற்கு வெல்கம் சொல்லப் போகிறார்.

இதற்காக ஒரு பள்ளிக் கூடத்தை சென்னையில் திறக்கப் போகிறாராம்.

சென்னை கலாஷேத்திராவில் பரதம் பயின்றவர் தியா என்பது தெரியும்தானே?தனக்குத் தெரிந்த நடனம், தன்னோடு முடங்கி விடாமல் பலருக்கும் கற்பித்து நல்லவாத்தியாராக விளங்க ஆசையாக உள்ளார் தியா.

தியாவின் வருங்கால வாத்தியாரும் இதற்கு ஓ.கே. சொல்லி விட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil