Diya Krishna: ரூ. 69 லட்சம் அபேஸ்.. கர்ப்பமாக இருந்த மலையாள நடிகரின் மகளை ஏமாற்றிய ஊழியர்கள்!
கொச்சி: மலையாள சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவர் நடிகர் கிருஷ்ணகுமார். இவரது மகள் தியா கிருஷ்ணா, இவர் ஓ பை ஓஸி என்ற விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த விற்பனை நிறுவனத்தின் மூலம் பெண்கள் அணியும் ஆபரணங்களையும் ஆடைகளையும் விற்பனை செய்து வருகிறார். மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்த நிறுவனத்தில் இருந்து ரூபாய் 69 லட்சங்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தியா கிருஷ்ணா ஓ பை ஓஸி என்ற விற்பனை நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் என்பதைக் காட்டிலும் ஓ பை ஓஸி நிறுவனத்தின் உரிமையாளர் என்றுதான் பலராலும் அறியப்படுகிறார். இவர் காவல்துறையில் அளித்த புகாரில், தனது நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள், ரூபாய் 69 லட்சங்களை திருடி விட்டதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அந்த மூன்று பெண்களும் தியா கிருஷ்ணா மீது புகார் அளித்துள்ளனர்.
முன்னாள் ஊழியர்களான குற்றம் சாட்டப்பட்டுள்ள வினிதா, ராதாகுமாரி மற்றும் திவ்யா ஆகியோர் அளித்த புகாரில், " தியா கிருஷ்ணா சொல்லிதான் நாங்கள் எங்கள் ஏ.டி.எம்-இல் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தோம் என்றும், தியா கிருஷ்ணா வரி ஏய்ப்பு செய்ய, எங்களின் மொபைல் எண்கள் மற்றும் முகவரியை பயன்படுத்தியதாகவும்" குறிப்பிட்டுள்ளனர். இதனால் தியா கிருஷ்ணா மற்றும் நடிகர் கிருஷ்ணகுமார் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

69 லட்சம் மோசடி: இந்த விவகாரத்தில் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. தியா கிருஷ்ணா கர்ப்பமான பின்னர்தான் இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தியா கிருஷ்ணாவால் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை கவனிக்க முடியாமல் இருந்துள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பெண்களும் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் காவல்துறை விசாரணையில் தியா கிருஷ்ணாவின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் அந்த மூன்று பெண்களின் வாழ்க்கை முறை மிகவும் மாறுபட்டு உள்ளதாகவும் அதில் ஒரு பெண் புதிதாக வீடு கட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் மூவரும் சமீபகாலமாக அதிகப்படியான நகைகளை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு: வரி ஏய்ப்பு செய்ததாக மூன்று ஊழியர்களும் முன்வைத்த குற்றச்சாட்டினை அடுத்து, தியா கிருஷ்ணா தனது வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்த ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்தார். தற்போது வரை அந்த மூன்று பெண்களின் மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃபில் உள்ளது. மேலும் இவர்கள் மூவரும் தற்போதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன் ஜாமீன்: அந்த மூன்று பெண்களுக்கும் தியா குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பெண்களும் கூறுவது போல் உள்ள சிசிடிவின் காட்சிகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஊழியர்கள் மீது புகார் அளித்துவிட்டு, தியா கிருஷ்ணா மற்றும் கிருஷ்ண குமார் என இருவரும் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நடிகர் கிருஷ்ணகுமார் கேரள பாஜகவில் முக்கியமானவராக உள்ளார்.


Click it and Unblock the Notifications











