»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கிரணின் இடத்தை இவர் நிச்சயமாகப் பிடிப்பார் என்கிறார்கள் புதுமுகமான தியாவை சூட்டிங் ஸ்பாட்டில் வைத்துப்பார்த்தவர்கள்.

அந்த அளவுக்கு குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டுகிறாராம். கிரணைப் போலவே டைரக்டர் சொல்வதைவிடவும்அதிகமான கவர்ச்சியை இவராகவே காட்டுகிறாராம். வழக்கமாக கிரண் தான் சேலையைக் கட்டச் சொன்னால் கூடஅதிலும் ஏதாவது கவர்ச்சி காட்ட முடியாதா என்று டிரை பண்ணுவார். அதே டெக்னிக்கை தியாவும் கையாண்டுவருகிறார்.

குறும்பு படத்தில் இவர் காட்டி வரும் கவர்ச்சியால் கோடம்பாக்கமே அலறுகிறது. கலாஷேத்ரா மாணவியானஇவர் பரதம், சமஸ்கிருதம் எல்லாம் அறிந்தவர். மாடலிங் பக்கம் வெற்றிகரமாக உலாவிவிட்டு தமிழ் சினிமாவில்காலடி எடுத்து வைத்துள்ளார்.

குறும்பு படத்தில் முதலில் நடிக்கத் தான் இவரைப் பிடித்துப் போட்டார்கள். ஆனால், எப்படியும் நடிக்கத் தயார்என தியா திமிரவே, உடைகளை உரித்து எடுத்துவிட்டு கவர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து கேரக்டரையேமாற்றிவிட்டார்களாம்.

கதாயநாயகன் நரேஷே தெரித்து ஓடும் அளவுக்கு காதல் காட்சிகளில் நெருக்கமும்காட்டுகிறாராம்.

காட்டி கவர்ச்சிக்கு உரிய பலனும் கிடைத்துவிட்டது. தனுஷ் நடிக்கவுள்ள ட்ரீம்ஸ் படத்துக்காக அதீத கவர்ச்சிகாட்டக் கூடிய ஹீரோயினைத் தேடியவர்கள் குறும்பு ஸ்டில்களைப் பாத்துவிட்டு தியாவைத் தேடி வீட்டுக்கேவந்துவிட்டார்கள்.

இப்போது அந்தப் படத்தில் இவர் தான் ஹீரோயின். அட்வான்ஸைத் தரும்போதே கவர்ச்சி பற்றியும் டைரக்டர்பேச, அதையெல்லாம் அசத்திருவோம் என்று உறுதிமொழி தந்து அனுப்பினாராம் தியா.

என்னங்க இப்படி கவர்ச்சி காட்ரீங்களே என்று கேட்ட நிருபரிடம் தியா சொன்ன பதில், நான் எவ்வளவுகவர்ச்சியான உடையணிந்தாலும் அது ஆபசமாகவே இருக்காது.

அப்படியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil