102 டிகிரி ஜுரம் இருந்தபோது ஹரிஹரன் பாடிய ஏ.ஆர்.ரகுமானின் மெகா ஹிட் பாடல் தெரியுமா..!

சென்னை: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா துறைக்கு ஏ ஆர் ரகுமான் அறிமுகம் செய்த பாடகர் தான் ஹரிஹரன்.

இவருக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு. கிட்டத்தட்ட இவர் பாடிய பாடல்களில் 90 சதவீதம் மேல் ஹிட் பாடல்கள் ஆகவே அமைந்துள்ளது.

மெல்லிய குரலில் பாடுவதற்கு இவரை அடித்துக் கொள்ள இன்னும் எந்த பாடகரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழா தமிழா

தமிழா தமிழா

ரோஜா திரைப்படத்தின் மையக்கருவை ஒட்டிய பாடல்தான் தமிழா தமிழா பாடல். இன்னும் கூட அந்த பாடலைக் கேட்டால் புல்லரிப்பு ஏற்படும். இந்த பாடலை பாடுவதற்காகதான் முதன் முதலாக ஹரிஹரனை அழைத்து வந்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். பாடலை வைரமுத்து சொல்லிக் கொடுக்கும்போது ஹரிஹரனுக்கு ழகரம் வரவில்லையாம். வைரமுத்து விடாப்பிடியாக அதனை சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க ஏ ஆர் ரகுமான்,"சார் மும்பையில் அவர் பெரிய சிங்கர்" என்று கூறினாராம். அதற்கு வைரமுத்து பாடலே தமிழா தமிழா என்று வரும் பொழுது உச்சரிப்பு சரியாக இல்லையென்றால் தவறாக இருக்கும் என்று உச்சரிப்பை சொல்லிக் கொடுத்த பின்னரே அந்த பாடலை பாட வைத்தார்களாம். அதனால்தான் அதற்குப் பிறகு அவர் பாடிய அனைத்து பாடல்களிலுமே உச்சரிப்பு சரியாக இருக்கும்.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

மிகப் பெரிய கஸல் சிங்கரான ஹரிஹரன் பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளரும் கூட. இளையராஜா அவர்கள் காசி திரைப்படத்திற்கு இசையமைத்த போது முழு பாடல்களையுமே ஹரிஹரனை தான் பாட வைத்தார். தேசிய விருதுகள், மாநில விருதுகள், நந்தி விருதுகள், ஏசியாநெட், ஃபிலிம் விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ளார்.

லவ் பேர்ட்ஸ்

லவ் பேர்ட்ஸ்

இயக்குநர் பி வாசு முதன் முறையாக ஏ ஆர் ரகுமானுடன் லவ் பேர்ட்ஸ் திரைப்படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தினுடைய அனைத்து பாடல்களுமே இன்று வரை மக்களால் ரசிக்கப்படக் கூடியவை. குறிப்பாக மலர்களை பாடல் ஏ ஆர் ரகுமானின் ரொமாண்டிக் ஹிட் லிஸ்டில் கண்டிப்பாக இடம் பிடித்துவிடும். ஆனால் அந்த பாடல் பாடிய போது ஹரிஹரனுக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

102 டிகிரி காய்ச்சல்

102 டிகிரி காய்ச்சல்

ஹரிஹரன் 102 டிகிரி காய்ச்சலுடன் ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவிற்கு சென்றபோது, தன்னுடைய குரல் சரியாக இல்லை என்று கூறியுள்ளார். அப்பொழுது ஒரு முறை பாடி பார்த்து விடலாம் என்று பாடச் சொன்னாராம் ரகுமான். ஹரிஹரனுக்கு அது திருப்தியாக இல்லை என்றாலும் குரல் இன்று அழகாக இருக்கிறது என்று ரகுமான் அவரை வெகுவாக பாராட்டி அந்தப் பாடலை பாட வைத்தார் என்று ஹரிஹரன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X