Don't Miss!
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- News
பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படத்தை.. மொபைலில் பார்த்த சிபிஎம் சென்னை கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன் தன்னுடைய கதாநாயகியை எப்படி தேர்வு செய்துள்ளார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 3-ல் பிரபலமான போட்டியாளராக இருந்தவர் இலங்கைத் தமிழரான தர்ஷன்.
தற்சமயம் தமிழில் சில படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள நாடு திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
எனக்கு உங்க ஸ்டைல்லதான் பாட்டு வேணும் என்று பிக் பாஸ் ஏ.டி.கேவிடம் கேட்ட ஏ.ஆர்.ரகுமான்

தர்ஷன்
இலங்கைத் தமிழரான தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வரப் போகிறவர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். ஒருமுறை இவர் நாமினேட் ஆனபோது இவர் எப்படியும் எளிமினேட் ஆக மாட்டார் என்று இவருக்கு பதிலாக இன்னொரு முக்கியமான போட்டியாளருக்கு இவருடைய வாக்குகள் பெரும்பாலும் சென்றது. அதனால் எதிர்பாராத விதமாக அவர் வெளியேறினார். டைட்டிலிற்கு பொருத்தமானவர் என்பதால் அந்நிகழ்ச்சியிலேயே கமல் தன்னுடைய இந்தியன் 2 திரைப்படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார்.

கூகுள் குட்டப்பா
பின்னர் தன்னுடைய சக போட்டியாளரான லோஸ்லியாவுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்தான் அந்தப் படத்தை தயாரித்திருந்தார் தற்சமயம் எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நாடு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சாட்டை, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்துள்ள மகிமா நம்பியார் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

நாடு
வலியவன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு சரவணன் முன்னதாகிய இயக்கிய இவன் வேற மாதிரி படத்தை சக்ரவியூகா என்கிற பெயரில் கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமாரை வைத்து இயக்கியிருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் திரிஷாவை வைத்து ராங்கி என்கிற படத்தை எடுத்துள்ளார். ராங்கி இன்னும் வெளியாகாத நிலையில் மீண்டும் புனித் ராஜ்குமார் மற்றும் சுதீப்பை வைத்து ஒரு கன்னட படத்தை அறிவித்தார். ஆனால் புனித் எதிர்பாராத விதமாக மறைந்துவிட்டதால் தற்சமயம் நாடு படத்தை இயக்கியுள்ளார்.

மகிமா பேச்சு
பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகிமா பேசியபோது, சரவணன் தனக்கு ஃபோன் செய்து கதையை கூறிய பத்தாவது நிமிடத்திலேயே அதில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று மேனேஜரிடம் கூறினாராம். பின்னர் மகிமாதான் கதாநாயகி என்று சரவணன் உறுதி செய்தவுடன், எப்படி என்னை தேர்வு செய்தீர்கள் என்று மகிமா கேட்டபோது, நான் கதை கூறிய கதாநாயகிகளில் முதலில் நடிக்க சம்மதித்தது நீங்கள்தான் என்றாராம். அவரிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றாக நடிப்பீர்கள் என கூறுவார் என்று பார்த்தால், இப்படி ஒரு காரணத்தை கூறினார் என மகிமா பேசியிருந்தார்.