twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    17 இசையமைப்பாளர்கள் இசையில்.... விஜய் எத்தனை ஹிட் கொடுத்து உள்ளார் தெரியுமா ?

    |

    சென்னை: தளபதி விஜயினுடைய 48-வது பிறந்தநாளையும் அவரது வாரிசு திரைப்பட்டத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக்கையும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.

    நடனத்துக்கு பெயர் போன நடிகர் விஜய் இதுவரை இளையராஜா, AR ரஹ்மான் , யுவன் மற்றும் அனிருத் உள்ளிட்ட பதினேழு இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

    அவரை முதன் முதலாக பாடகராக அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் தேவா. அவரது இசையில் மட்டும் ஒன்பது பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் GV பிரகாஷ் இசையில் தெரி படத்தின் அறிமுகப் பாடலை தேவா இவருக்காக பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

     ரஜினிக்கு என் கதை ரொம்பவே பிடித்திருந்தது... இயக்குனர் நெல்சன்! ரஜினிக்கு என் கதை ரொம்பவே பிடித்திருந்தது... இயக்குனர் நெல்சன்!

    விஜய் பாடிய பாடல்கள்

    விஜய் பாடிய பாடல்கள்

    பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி, ஐயய்யோ அலமேலு, தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா , ஊர்மிளா ஊர்மிளா, தம்மடிக்கிற ஸ்டைல பாத்து, தங்க நெறத்துக்குத்தான், என்னோட லைலா வராளே ஸ்டைலா ,ஓஹ் பேபி- பேபி, கொக்க கோலா, வாடி வாடி, கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா, கண்டாங்கி கண்டாங்கி, செல்ஃபி புள்ள, வெறித்தனம், குட்டி ஸ்டோரி, ஜாலியோ ஜிம்கானா என்று விஜய் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் ஆகியுள்ளது.இன்னும் இன்னும் நிறைய படங்களில் பல பாடல்கள் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிற நடிகர்களுக்காக பாடியது

    பிற நடிகர்களுக்காக பாடியது

    விஜய் தன்னுடைய படங்களுக்கு மட்டுமல்லாமல் பிற நடிகர்களின் படங்களுக்கும் பாடியுள்ளார். துள்ளித்திறிந்த காலம் படத்தில் அருண் விஜய்க்கும், வேலை படத்தில் விக்னேஷிற்கும், பெரியண்ணா படத்தில் சூர்யாவிற்காகவும் பாடியுள்ளார்.விஜய் பாட்டு பாடுவது என்பதை மிகவும் ரசித்து ரசித்து செய்ய கூடியவர் .

    இசைக் குடும்பம்

    இசைக் குடும்பம்

    விஜய் இவ்வளவு அழகாக இத்தனை ஹிட் பாடல்களை பாடியதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் இவரது அம்மா ஷோபா சந்திரசேகரும், தாய் மாமன் SN சுரேந்தர் அவர்களும் பின்னணி பாடகர்கள். இசைக் குடும்பத்தில் வளர்ந்ததாலேயே விஜய்யும் சிறப்பாக பாடுகிறார் என்று பலரும் சொல்லுவார்கள் . இருந்தாலும் கூட விஜய்யின் மெனக்கெடல், பாடல் பாடுவது மீது காட்டும் ஆர்வம், துள்ளல் இசை , மெலடி சாங் என்று தன்னுடைய திறமையை பல வகையில் நிரூபித்து உள்ளார் .

    அம்மாவுடன் பாடியது

    அம்மாவுடன் பாடியது

    விஜய் அவரது தாயுடனும் சேர்ந்து பாடல்கள் பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவா இசையில் தொட்ட பெட்டா ரோட்டு மேல மற்றும் ஊர்மிளா ஊர்மிளா ஆகிய இரண்டு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடிப்பில் சிவகாசி படத்தில் "கோடம்பாக்கம் ஏரியா" பாடலை ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

    பிற பாடகர்களுடன் பாடியது

    தனித்து பாடியது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களுடனும் விஜய் பாடியுள்ளார். SP பாலசுப்பிரமணியம், சித்ரா, சுவர்ணலதா, மனோரமா, சாஹுல் ஹமீத், பவதாரணி, உன்னி கிருஷ்ணன், சுஜாதா, அனுராதா ஶ்ரீராம், பிரேம்ஜீ அமரன், SPB சரண், பிரியங்கா சோப்ரா, வடிவேலு, ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல், ஷ்ருதி ஹாசன், அனிருத் உள்ளிட்ட பல பாடகர்களுடன் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Do you know how many hits Vijay gave with the help of 17 Music Directors?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X