“தூதுவளை இலை அரைச்சி“ பாடல் புகழ் நடிகை மீரா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: தூதுவளை இலை அரைச்சி.. தொண்டையில தான் நனைச்சி.. என்ற எவர் கிரீன் பாடலுக்கு சொந்தக்காரி தான் நடிகை மீரா. தங்கை மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தங்கையாகவே மாறிப்போன நடிகை மீரா இப்போது எங்கே இருக்கிறார். என்ன செய்கிறார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1974ஆம் ஆண்டு கேரளாவில் மலபார் கடற்கரை பகுதியான கோழிகோட்டை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகை மீரா. இவரின் தாயார் கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலைகளில் புகழிடமான கலா மண்டலத்தில் பயின்ற மாணவி மல்லிகா ஆவார். மல்லிகா மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி பன்மொழி படங்களில், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு மகளாக பிறந்த மீரா மட்டும் சளைத்தவராக இருப்பாரா என்ன?

Meera Thanga manasu
Photo Credit:

நடிகை மீரா: தனது பள்ளி படிப்பை சொந்த ஊரான கோழிக்கோட்டில் ஆரம்பித்த மீரா, நாட்டிய கலையிலும் தன்னை திறம்பட வளர்த்துக் கொள்ளும் பொருங்டடு, கதகளி, குச்சிப்பொடி மற்றும் பரதத்தை கற்றுக்கொண்டார். இதனால், பள்ளியில் நடைபெறும் நடன போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வந்தார். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் குடியேறினார். மீராவின் வசீகரமான முகம், கொல்லை கொள்ளும் பார்வையால், தமிழ் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. இதையடுத்து, மலைச்சாரல் திரைப்படத்தில், மலை கிராமத்து பெண்ணாக 'சுட்டி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் மீராவிற்கு முதல் திரைப்படமாக இருந்த போதும், படம் வெளியாக தாமதமானதால், மீரா, சீமா என்ற பெயரில் நடித்த வெள்ளையத்தேவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ராம்கியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

திறமையான நடிகை: இதைத்தொடர்ந்து, சாமி போட்ட முடிச்சு திரைப்படத்தில் முரளியை விரும்பும் விதவைப் பெண் ரோலில் நேர்த்தியான நடிக்கை வெளிப்படுத்தி நடித்து இருந்தார். இந்த படத்தின் பின் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், சின்ன கவுண்டர், சாமுண்டி, தாய் மனசு, முதல் பயணம், தாட் பூட் தஞ்சாவூர், வீட்டைப்பாரு நாட்டை பாரு, பரம்பரை, பொண்ணுவீட்டுக்காரன், என அடுத்தடுத்து திரைப்படங்களில் தங்கை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது முத்திரைப்பதித்து வந்தார் மீரா என்கிற சீமா. இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து மலையாள ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

Take a Poll

நல்ல வாழ்க்கை:அழகும், திறமையும் இருந்த போதும் தொடர்ந்து இரண்டாவது கதாநாயகி, தங்கை மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால், மீராவிற்கு அதுபோன்ற கதாபாத்திரங்களே வந்ததால், இவரால் கதாநாயகியாக நடிக்க முடியாமல் போனது தான் சோகம். 1997ம் ஆண்டு வெளியான பொண்ணுவீட்டுக்காரன் என்ற படத்தோடு தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு, கர்நாடகாவில் தனது தாயார் மல்லிகாவோடு இணைந்து பாரம்பரிய இசையை கற்றுத்தரும் 'ஸ்டார் மியூசிக் அகாடமி' ஆரம்பித்தார் மீரா. பின்னாளில் துபாயில் கணவன், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.இவரின் போட்டோ எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லை.

More from Filmibeat

Read more about: meera மீரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X