சிவாஜி பேரை கேட்டதும் பயத்தில் 11 முறை கழிவறைக்கு சென்ற ராதா ரவி... காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் ராதாரவி தற்சமையும் நடிப்பிலும் அரசியலிலும் பிசியாக இருக்கிறார்.

Recommended Video

Vijay Sethupathi Trend-ஐ 1950-லே செய்த Sivaji Ganesan*Cinema

சர்ச்சையாகவும் நகைச்சுவையாகவும் மேடைகளில் தொடர்ந்து பேசி செய்திகளின் தலைப்புகளில் இடம் பெறக் கூடியவர் ராதாரவி

சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசிய போது நடிகர் சிவாஜி கணேசனுடன் முதன்முறையாக நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பரிட்சைக்கு நேரமாச்சு

பரிட்சைக்கு நேரமாச்சு

நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் முக்தா ஸ்ரீனிவாசன். நாயகன் திரைப்படத்தை தயாரித்திருந்ததும் இவர்தான். 1982-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஒய்.ஜி.மகேந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த பரிட்சைக்கு நேரமாச்சு என்கிற படத்தை இயக்கியிருந்தார். ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகத்தை மையப்படுத்தி உருவான படம் அது.

வித்யாசமான கதை

வித்யாசமான கதை

இந்தப் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். சிவாஜி கணேசனின் மகனாக ஒரு வேடத்தில் அப்ராணியாக இருக்கும் மகேந்திரன் பரிட்சைக்கு செல்லும்போது ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துவிடுவார். இதனால் சிவாஜியின் குடும்பம் கலைந்து கணவன் மனைவி சோகமாக நாட்களை நகர்த்துவார்கள். ஒரு நாள் திடீரென்று திருடனாக இருக்கும் இன்னொரு மகேந்திரன் இவர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களது வாழ்க்கையை மாற்றுவான். இந்த மகேந்திரன்தான் அந்த மகேந்திரனை விபத்தில் கொன்றார் என்று இறுதியில் சிவாஜிக்கு தெரிய வரும். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ். இதில் ராதா ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராதா ரவிதான் விபத்தை உண்டாக்கியவன் என்கிற கோணத்தில்தான் படம் நகரும்.

பீதியான ராதா ரவி

பீதியான ராதா ரவி

இந்தப் படம்தான் முதன் முதலில் சிவாஜி கணேசனுடன் ராதாரவி நடித்த படமாம். முதல் நாள் படப்பிடிப்பில் மேக்கப் போட்டு ராதாரவி தயாராக அமர்ந்திருக்க ஷாட் ரெடியாகிவிட்டது நீங்களும் சிவாஜி கணேசன் ஐயாவும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று துணை இயக்குநர் அழைத்தபோது பீதியாகி பாத்ரூமிற்கு சென்றுவிட்டாராம். அவருடன் நடிக்கப் போகிறோமே என்ற பயத்தில் அன்று முழுவதும் கிட்டத்தட்ட 11 முறை கழிவறை சென்று வந்ததாக ராதாரவி கூறியுள்ளார்.

எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதா

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இவர்கள் இருவரை விட மூத்தவர் எம்.ஆ.ராதா. நாடகத்துறையில் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர். இருவரையுமே பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு ஆளுமை மிக்கவர். நடிகவேள் என்று அழைக்கப்பட்ட நடிப்புக்கு பெயர் போன எம்.ஆர்.ராதாவின் மகன் ராதா ரவியே சிவாஜி கணேசனுடன் நடிப்பதற்கு பயந்துள்ளார். காரணம் அவரது பெயரைக் கேட்டாலே அனைவரும் பயப்படுவார்கள் என்று ராதா ரவி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X