திருமண மேடையில் இருக்கும்போதே விஜய் செய்த நெகிழ்ச்சியான காரியம் தெரியுமா...

சென்னை: சினிமா துறையை பொறுத்தவரை ஒருவரை ஏற்றி விட வேண்டும் என்று நினைத்தால் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடும். அதே வேளையில் கொஞ்சம் சறுக்கினால் கூட அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும்.

ஓவர் நைட்டில் புகழின் உச்சத்தை அடைந்த பல பேரை நாம் சினிமாவில் பார்த்து வருகிறோம். அதே வேளையில் ஒரே படத்தில் வீழ்ந்தவர்களை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்த வகையில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்பட தயாரிப்பாளர், விஜய் பற்றி கூறிய ஒரு சம்பவத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் தங்களது ஆரம்ப காலத்தில் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ராஜாவின் பார்வையிலே மட்டும்தான். ஜானகி சௌந்தர் என்ற இயக்குநர் இயக்கிய இந்தப் படத்தை சவுந்தரபாண்டியன் என்பவர் தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க, வடிவேலு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்

தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்

ராஜாவின் பார்வையிலே படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து சௌந்தர பாண்டியன் தயாரித்திருந்த மற்ற படங்களும் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கவே, அவர் வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டாராம்.

விஜய் திருமணம்

விஜய் திருமணம்

அப்போதுதான் நடிகர் விஜய்யின் திருமணம் அறிவிக்கப்பட்டிருந்தது அவரது திருமணத்தில் பங்கு பெறுவதற்காக தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் உள்ளிட்டோர் அந்நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர் . இவர் தயாரிப்பாளர் என்று தெரியாமல் அங்கிருந்த பாடி கார்ட்ஸ் இவர்களை சிறப்பு வழியில் அனுப்பாமல் ரசிகர்களோடு ரசிகர்களாக அனுப்பியுள்ளார்கள். தானும் ஒரு விஜய் ரசிகன் என்பதால் அதனை பெரிது படுத்தாமல் அந்த வரிசையில் சென்றுள்ளார்.

விஜய்யின் செயல்

விஜய்யின் செயல்

ரசிகர்கள் ஒரு கயிருக்கு பின்னால் இருந்துதான் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அப்படி சவுந்தரபாண்டியன் விஜய் அருகே சென்றதும் 'தம்பி.. தம்பி...' என்று அழைத்துள்ளார். அவரைப் பார்த்த விஜய் ஏன் சிறப்பு வரிசையில் வரவில்லை என்று கேட்க, என்னை உள்ளே விடவில்லை என்று சௌந்தர பாண்டியன் கூற, பாடி கார்ட்ஸிடம் சொல்லி அவரையும் ஒளிப்பதிவாளரையும் மேடைக்கு அழைத்து தனது மனைவி சங்கீதாவிடம் இவர் என் தயாரிப்பாளர், இவர் என் ஒளிப்பதிவாளர் என்று அறிமுகம் செய்து வைத்தாராம். அவர்களுக்கு அருகில் இருந்த பெரிய தயாரிப்பாளரை கூட விஜய் சங்கீதாவிடம் குறிப்பிட்டு அறிமுகம் செய்யவில்லையாம். வறுமையில் இருந்தாலும் தன்னிடம் விஜய் நடந்து கொண்டதை நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X