எம்.ஜி.ஆர், இளையராஜா, ராமராஜன், சினேகா பற்றி சுந்தர் சி என்ன கூறியுள்ளார் தெரியுமா?
சென்னை: திரைத் துறைக்கு வரும் அனைவருமே யாராவது ஒருவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் வருவார்கள்.
அப்படி வருபவர்களில் பலர் மற்றவருக்கு இன்ஸ்பிரேஷனாக அமைவதிலும் தவற மாட்டார்கள்.
அப்படி இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு பிடித்தமான சினிமா துறையிலேயே வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

காஃபி வித் காதல்
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து கன்சிஸ்டெண்டாக திரை துறையில் பயணிக்கும் சுந்தர்.சி தற்சமயம் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் "காஃபி வித் காதல்". இளையராஜா அவர்களின் ரம் பம் பம் பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. மைக்கேல் மதன காம ராஜன் படத்திலிருந்து அடுத்தடுத்து பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. சுந்தர்.சியின் வழக்கமான திரைப்படங்கள் போன்றே இந்தப் படத்தின் காட்சிகளும் அமைந்துள்ளது. காபி வித் காதல் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருந்த "அன்பே வா" திரைப்படமாம். அது தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் தன்னுடைய ஃபேவரைட் ஜானரான நகைச்சுவை ஜானரில் எப்பவுமே இயக்குநர் பாலச்சந்தர் இயக்கியிருந்த "பாமா விஜயம்" தான் பிடிக்கும் என்றும் சுந்தர்.சி கூறியுள்ளார்.

நடிகர் நடிகையர்
நடிகர்களை பொருத்தவரை அப்போதும் இப்போதும் எப்போதுமே தனக்கு எம்ஜிஆர் தான் பிடித்த கதாநாயகன் என்றும் நடிகைகளில் தனது மனைவி குஷ்பூ தான் முதலில் பிடிக்கும். குஷ்பூவை தவிர்த்து சினேகா பிடிக்கும் என்று கூறியுள்ளார். இயக்குநர் ஆவதற்கு முன்பாகவே குஷ்புவின் ரசிகராக இருந்த சுந்தர்.சி பிற்காலத்தில் தன் முதல் படத்தில் நடிக்க வைத்தது மட்டுமல்லாமல் தனது வாழ்க்கை துணையாகவும் குஷ்புவை தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளையராஜா ராமராஜன்
தினமும் இரவு இசைஞானி இளையராஜா அவர்களின் பாடலை கேட்டு விட்டு தான் சுந்தர்.சி தூங்குவாராம். குறிப்பாக ராமராஜன் திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்த பாடல்களைத்தான் அடிக்கடி கேட்பாராம். வீட்டில் மட்டுமில்லாமல் ஷூட்டிங் சென்றாலும் பயணத்தில் இருந்தாலும் இரவு நேரம் அவர்களுடைய பாடலை தான் விரும்பி கேட்பதாகவும் அதுவே அவருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை விளையாட்டு
நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணி முதல் இப்போது இருக்கும் யோகி பாபு வரை அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களுடனும் சுந்தர்.சி பணியாற்றி விட்டார். அதில் தனக்கு எப்போதுமே பிடித்தவர் கவுண்டமணிதான் என்று கூறியுள்ளார். அதேபோல விளையாட்டுக்களில் கிரிக்கெட் மிகவும் பிடிக்குமாம். தான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் என்று சுந்தர் சி தனக்கு பிடித்தமான விஷயங்களை பட்டியலிட்டு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











