twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது! ரகுமானுக்கு காதல் கடிதங்கள் வந்துச்சா... அத யார் கிழிச்சு போட்டா தெரியுமா?

    |

    சென்னை: இசைப்புயல் AR ரகுமான் தற்சமயம் கோப்ரா, பொன்னியின் செல்வன், அயலான், பத்து தல, இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு, மாமன்னன் மற்றும் இயக்குநர் கதிர் இயக்கும் படங்கள் என 8 தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார்.

    எப்போதும் குறைந்த படங்களை தேர்வு செய்து அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு பணி புரிவதுதான் அவரது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ், மலையாளம், இந்தி, இங்கிலிஷ், அராபிக் என்று பல்வேறு மொழிகளில் மொத்தம் 20 படங்களுக்கு இசையமைக்கிறார்.

    இவ்வளவு பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தக் லைஃப் சம்பவங்கள் செய்து தலைப்புச் செய்திகளிலும் இடம் பிடிப்பார். அவர் முன்பு ஒரு முறை கொடுத்த பேட்டி தற்சமயம் இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.

    வித்தியாசாகருக்கு பெஸ்ட் ட்ரீடமென்ட் கொடுக்க சொன்னார் சிஎம்...ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தகவல் வித்தியாசாகருக்கு பெஸ்ட் ட்ரீடமென்ட் கொடுக்க சொன்னார் சிஎம்...ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தகவல்

    நடிகர் AR ரகுமான்

    நடிகர் AR ரகுமான்

    பொதுவாக இசையமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் ரகுமான், பிகில் படத்திலும் மோகன் லால் நடித்த ஆராட்டு திரைப்படத்திலும் பாடல் காட்சியில் தோன்றியிருப்பார். அதுவும் ஆராட்டு படத்தில் மோகன் லாலுடன் வசனம் பேசியே நடித்திருப்பார். அதில் முக்காலா பாடலை பாடச் சொல்லி மோகன் லால் AR ரகுமானின் காலில் விழப் போவது போன்று காட்சி இடம் பெற்றிருக்கும்.

    இயக்குநர் AR ரகுமான்

    இயக்குநர் AR ரகுமான்

    அட்கன் சட்கன் மற்றும் 99 சாங்ஸ் ஆகிய இரண்டு படங்களை தயாரித்து, 99 சாங்ஸ் படத்தின் எழுத்தாளருமாக இருந்த ரகுமான் இப்போது "லே மஸ்க்" என்கிற ஆங்கிலப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவரே எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 13 நாட்களில் ரோம் நகரில் படமாக்கப்பட்டது. இது Virtual Reality இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    காதல் கடிதங்கள்

    காதல் கடிதங்கள்

    AR ரகுமான் அளித்திருந்த ஒரு பேட்டியில் அவரது அக்காவும் GV பிரகாஷின் அம்மாவுமான AR ரெஹானா கலந்து கொண்டார். அப்போது ரகுமானுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்கிறார்களா என்ற கேள்வி கேட்கப்பட, அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். பதிலுக்கு ரோஜா படம் வெளியான சமயம் ரசிகைகளிடமிருந்து தனக்கு வந்த காதல் கடிதங்களை ரெஹானா தனக்குத் தெரியாமல் கிழித்து போட்டதாகவும், பிறகு எப்படி பெண் தோழிகள் இருப்பார்கள் எனவும் வேடிக்கையாக கூறியுள்ளார்.

    நானே வருகிறேன்

    நானே வருகிறேன்

    இன்னொரு நிகழ்வில் ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற நானே வருவேன் பாடலுக்கு பின்னால் இருக்கும் சுவாரசியத்தையும் பகிர்ந்துள்ளார். முதலில் அந்தப் பாடல் லிங்கா திரைப்படத்திற்காக இசையமைத்ததாகவும், ஃப்யுச்சரிஸ்டிக்காக இருக்கிறது என்ற அந்தப் பாடலை ரவிக்குமார் நிராகரித்ததாகவும், பின்னர் ஒரு நாள் மணிரத்தினத்திடம் போட்டு காண்பித்த பொழுது அது அவருக்குப் பிடித்துப் போய் ஓ காதல் கண்மணி படத்தில் பயன்படுத்திக் கொண்டார் எனவும் AR ரகுமான் கூறியுள்ளார்.

    English summary
    Do you know who have teared the Love letters came to AR Rahman?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X