பாட்ஷா படத்தில் முதலில் ரஜினி நண்பாக தேர்வான சூப்பர் ஹீரோ... யார் தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் பாட்ஷா.
ரஜினிகாந்த் படங்களிலேயே மிகவும் முக்கியமான படமாகவும் ரசிகர்களுக்கு பிடித்த முதன்மையான படமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது.

பாட்ஷா
நடிகர்கள் ரஜினிகாந்த், ரகுவரன், ஜனகராஜ், ஆனந்த்ராஜ், சரண்ராஜ், விஜயகுமார் மற்றும் நடிகை நக்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, தேவா இசையில், வைரமுத்துவின் வரிகளில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் பாட்ஷா. இந்த திரைப்படமே நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த ஒரு இந்தி திரைப்படத்தின் தழுவலாகும். தனது தம்பிக்காக காலேஜில் சீட் வாங்க போகும் இடத்தில் நடக்கும் ஒரு காட்சி தான் இந்தக் கதைக்கு ஆரம்பமாக இருந்துள்ளது.

சுரேஷ் கிருஷ்ணா
பாட்ஷா திரைப்படத்தை இயக்குவதற்கு தங்களுக்கு வாய்ப்பு வந்ததாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் கூறியுள்ளனர். இளையராஜாவிற்கு பதில் தேவா இசையமைக்கட்டும் என்று ரஜினி சொன்ன ஒரே காரணத்திற்காக ஆர்.கே.செல்வமணி அந்தப் படத்தை இயக்க மறுத்துவிட்டாராம். இன்னொரு பக்கம் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கியிருந்த மனோபாலாவிடமும் பேச்சுவார்த்தை நடை பெற்றதாம். ஆனால் அவருக்கு சொல்லாமலேயே சுரேஷ் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்து விட்டதாக மனோபாலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன் பின்னரே சுரேஷ் கிருஷ்ணா ஒப்பந்தமானார். அண்ணாமலை, வீரா திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி மற்றும் சுரேஷ் கிருஷ்ணாவின் கூட்டணி ஹாட்ரிக் ஹிட் அடித்தது.

மாணிக்கம்
படத்தின் தலைப்பு பாட்ஷா என்றாலும், ரஜினிகாந்த் பாட்ஷாவாக நடித்திருந்தாலும் கதையில் அவருடைய பெயர் மாணிக்கம். அவருடைய நண்பர் பெயர் தான் பாட்ஷா. முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியை தான் தேர்வு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால் அப்போது தான் தளபதி படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் ரஜினி மற்றும் மம்மூட்டி நடித்தால் ரிப்பீட்டாக இருக்கும் என்று எண்ணிய ரஜினி நடிகர் சரண்ராஜை அந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தாராம்.

சரண் ராஜ்
நடிகர் முரளியின் தந்தையும் இயக்குநருமான சித்தலிங்கையா அறிமுகப்படுத்திய நடிகர்தான் சரண்ராஜ். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் டெரிஃபிக்கான வில்லனாக பல திரைப்படங்களில் வலம் வந்தவர். தர்மதுரை, பணக்காரன், வீரா படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் ரஜினியுடன் நடித்திருப்பார். கடைசியாக நடிகர் சூர்யா நடித்திருந்த வேல் திரைப்படத்தில் நடித்திருந்த சரண்ராஜ் அதன் பிறகு மூன்று சிறிய தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











