twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னப் பையன் மாதிரி நடந்துக்காதீங்க... நடிகர் நட்டியை விஜய் ஏன் கண்டித்தார் தெரியுமா?

    |

    சென்னை: சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நட்டி என்கிற நட்ராஜை பலருக்கும் நடிகராக மட்டும்தான் தெரியும். ஆனால் அவர் இந்திய அளவில் டிமாண்ட் உள்ள ஒரு ஒளிப்பதிவாளர்.

    ஜப் வீ மெட், கோல்மால் ரிட்டர்ன்ஸ், நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, துப்பாக்கி இந்தி ரீமேக்கான ஹாலிடே உள்ளிட்ட பல இந்தி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தமிழில் மிளகா திரைப்படத்தில் நடித்த பொழுது பல இந்தி நடிகர்கள் அந்தப் படத்தை புரமோட் செய்யும் வகையில் பைட்ஸ் கொடுத்து, தமிழக மக்களுக்கு நட்டியை அறிமுகப்படுத்தினார்கள்.

     வெப் சீரிசில் கால் பதிக்கும் ஏவிஎம்.. சைபர் க்ரைமின் இருண்ட பக்கங்கள்.. “தமிழ் ராக்கர்ஸ்“! வெப் சீரிசில் கால் பதிக்கும் ஏவிஎம்.. சைபர் க்ரைமின் இருண்ட பக்கங்கள்.. “தமிழ் ராக்கர்ஸ்“!

    நடிகர் நட்டி

    நடிகர் நட்டி

    நாளை, மிளகா, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக மக்களின் மனதில் அவரது முகத்தை பதிய வைத்திருந்தாலும், அவரை நட்டி என்று மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்ற திரைப்படம் "சதுரங்க வேட்டை". கடைசியாக கர்ணன் திரைப்படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    விஜய்யின் படங்கள்

    விஜய்யின் படங்கள்

    தமிழில் அவர் ஒளிப்பதிவு செய்தது மூன்றே மூன்று படங்கள்தான். மூன்றுமே விஜய்யின் படங்களாகும். யூத், புலி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நட்டி துப்பாகி திரைப்படத்தில் வெண்ணிலவே தரையில் முளைத்தாய் பாடலுக்கு மட்டும் வேலை செய்து கொடுத்தார். நட்டி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், யூத் படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்.

    டைராக்டரின் சொதப்பல்

    டைராக்டரின் சொதப்பல்

    வழக்கமாக சினிமாவில் காஸ்ட்யூம் கண்டினியுட்டி பார்ப்பார்கள். அதாவது ஒரு காட்சியை ஒரு நாள் படம் பிடித்துவிட்டு, அதன் தொடர்ச்சியை வேறொரு நாள் எடுத்தால் அந்த நடிகர்கள் அதே காஸ்டியூமில் இருக்க வேண்டும். இல்லையெனில் படம் பார்க்கும்போது திடீரென காஸ்டியூம் மாறி தவறாக தெரியும். இதனை ஃபாலோ செய்ய வேண்டியது இயக்குனர் டீம். யூத் படத்தில் இருந்த துணை இயக்குனர் கவனிக்காமல் விட்டு காட்சியையும் படம்பிடித்துவிட்டனர். எடிட்டிங்கில் பார்க்கும்போதுதான் அதனை கவனித்துள்ளனர்.

    காப்பாற்றி மாட்டிக் கொண்ட நட்டி

    காப்பாற்றி மாட்டிக் கொண்ட நட்டி

    கேமராவில் போடப்படும் படச்சுருளில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டதால் மீண்டும் அந்தக் காட்சியை படம்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் விஜய்யிடம் கூறுங்கள் என்று இயக்குநர் கேட்டுக் கொண்டதால், நட்டியும் விஜய்யிடம் அப்படிச் சொல்லி மீண்டும் அந்தக் காட்சியை எடுத்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் நட்டியை அழைத்த விஜய், பொய் சொன்னால் சரியாகச் சொல்ல வேண்டும். மாட்டிக் கொள்ளும் வகையில் சொல்லக் கூடாது என்று சொல்ல, எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று நட்டி கேட்க, என்னுடன் நடித்த பெண் அன்று ஒரு உடையும் இன்று ஒரு உடையும் போட்டிருந்ததை நான் கவனித்துவிட்டேன். சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் என்று விஜய் கூறியதாக நட்டி நினைவு கூர்ந்துள்ளார்.

    English summary
    Dont Behave like childish, Thalapathy Vijay Warned Actor Natti
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X