twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீ நடந்தாலே போதும்.. டான்ஸ் எல்லாம் வேண்டாம்.. வினய்யை நடக்க விட்ட டான்ஸ் மாஸ்டர்!

    |

    சென்னை : உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வினய்.

    ஜெயம்கொண்டான், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, அரண்மனை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

    துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

    அசர்பைசான் நாடாளுமன்றத்தில் கார்த்தியோட சர்தார் சூட்டிங்.. வில்லன் போர்ஷனுக்கு இவ்வளவு கோடி செலவா? அசர்பைசான் நாடாளுமன்றத்தில் கார்த்தியோட சர்தார் சூட்டிங்.. வில்லன் போர்ஷனுக்கு இவ்வளவு கோடி செலவா?

     வரவேற்பு பெற்ற வில்லன்

    வரவேற்பு பெற்ற வில்லன்

    வில்லனாக வினய் நடித்த துப்பறிவாளன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வில்லனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் வினய். டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஓ மை டாக் என்று தொடர்ந்து வில்லனாக மிரட்டினார் நடிகர் வினய். ஹீரோவாக நடித்த பல படங்கள் நடிகர் வினய்க்கு கைகொடுக்காத நிலையில் துப்பறிவாளன் படத்தில் இவர் வில்லனாக நடித்து தனக்கான இடத்தை கைப்பற்றிக் கொண்டார்.

     முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் வினய். நடிகர் சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் மிரட்டியிருப்பார். அதேபோல் நடிகர் விஜயகுமார், அருண் விஜய், ஆர்ணவ் விஜய் மூவரும் இணைந்து நடித்த ஓ மை டாக் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுபோல் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு இதில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

     சாக்லேட் பாய்

    சாக்லேட் பாய்

    உன்னாலே உன்னாலே படத்தில் சாக்லேட் பாயாக நடித்த நடிகர் வினய். பல ரசிகர்களை பெற்றார். மாதவனுக்கு பிறகு இவர் சாக்லேட் பாயாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் வில்லன் கதாபாத்திரமாகவே அமைந்தது. உன்னாலே உன்னாலே திரைப்படத்தை எழுதி இயக்கியவர் ஜீவா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக உன்னாலே உன்னாலே, ஜூன் போனால் பாடல்கள் மிகவும் பிரபலமானது.

     சிட்டி சென்டர்

    சிட்டி சென்டர்

    சென்னை சிட்டி சென்டரில் எடுக்கப்பட்ட உன்னாலே உன்னாலே பாடல் ஒவ்வொரு பிரேமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக மொட்டை மாடியில் அனைத்து டான்ஸ்சர்கள் ஆடிக் கொண்டே நகரும் பொழுது, வினய் மட்டும் விசிலடித்துக் கொண்டே நடந்து செல்வார். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், பார்ப்பதற்கு அழகாகவும் அமைந்திருக்கும். இந்த சீனை பற்றி நடிகர் வினய் மனம் திறந்து கலகலப்பாக பேசியுள்ளார். அந்த சீனை படமாக்கும் பொழுது அனைத்து டான்ஸர்கள் ஒவ்வொரு ஸ்டெப் போட்டுக் கொண்டே நடந்து செல்வார்கள், நான் என்ன ஸ்டெப் போடவேண்டும் என்று நடன இயக்குநர் ராஜு மாஸ்டரிடம் கேட்டபோது நீ ஒன்றும் செய்யாமல் பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டு நடந்து சென்றால் போதும் என்று சொல்லி இருக்கிறார். இந்த காட்சிக்குபின்னால் அமைந்த இந்த விஷயத்தை வினய் மனம் விட்டு கூறியுள்ளார் .2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இன்றும் பல ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Dont do any Dance Just Walk for the Song, Dance Master Instruction to Actor Vinay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X