twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பையில் விக்ரம் பிரபுவை ஒரு வாரம் ஓட விட்ட துல்கர்... ஸ்கூல் ஃபளாஷ் பேக்

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் இப்போதுள்ள கதாநாயகர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா பின்னணியுடன் திரைத்துறைக்கு வந்தவர்கள். விக்ரம் பிரபுவும், துல்கர் சல்மானும் அந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    அதிலும் 1970-களுக்கு முன் கோடம்பாக்கம்தான் 4 தென்னிந்திய மாநிலங்களின் சினிமா துறைகளுக்கும் அடையாளமாக இருந்ததால் பல கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்கள் இங்கே பிறந்து வளர்ந்தார்கள்.

    அந்த வகையில் துல்கர் சல்மானும் சென்னையில் வளர்ந்தவர்தான். அதனால்தான் தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கும்போது அவரே டப்பிங் பேசுவார்.

     விக்ரம் பிரபு

    விக்ரம் பிரபு

    நடிக்க வருவதற்கு முன்பு தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரான சந்திரமுகி, அசல் போன்ற படங்களில் தயாரிப்பு சம்மந்தமான பணிகளை மேற்கொண்டார். அதன் பின் தனது தாத்தா மற்றும் அப்பா வழியில் சினிமாவில் கதாநாயகனாக ஆகலாம் என்று நடிக்க வந்தார். அதற்கு முன்னர் அவரது அப்பா போலவே சற்று உடல் எடையுடன் இருந்தவர் பின்னர் தன்னுடைய அர்ப்பணிப்பால் எடையை குறைத்து கதாநாயகன் ஆவதற்கு தன்னை தகுதி படுத்திக் கொண்டார்.

     ஆக்டிங் ஸ்கூல்

    ஆக்டிங் ஸ்கூல்

    அது மட்டுமின்றி, சிவாஜியின் பேரன் என்ற எண்ணத்துடன் நடிக்க வராமல், முறையாக நடிப்புப் பயிற்சி மேற்கொண்டுதான் கும்கி படத்தில் நடித்தார். அதற்காக மும்பையில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் மூன்று மாதங்கள் படித்திருக்கிறார். அதே ஆண்டு அதே பேட்சில்தான் மலையாள நடிகர் மம்முட்டி அவர்களின் மகனும் நடிகருமான துல்கர் சல்மானும் இணைந்திருக்கிறார்.

     துல்கரின் அறிமுகம்

    துல்கரின் அறிமுகம்

    சென்னையிலிருந்து தான் மட்டும்தான் அங்கு படிக்கச் சென்றிருக்கிறோம் என்றிருந்த விக்ரம் பிரபுவிற்கு இன்னொரு சென்னைவாசியும் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால், தான் மம்முட்டியின் மகன் என்று துல்கர் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையாம். சினிமா துறையை சேர்ந்தவரின் மகன் என்று தெரிந்தாலும், யாருடைய மகன் என்று தெரியாமல் விக்ரம் பிரபு மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் துல்கர் சொல்லாமலேயே நாட்களை கடத்தியிருக்கிறார். காரணம் துல்கரின் ஃபோட்டோ கூட அப்போது இணையத்தில் வந்ததில்லையாம்.

     ரகசியம் உடைத்த துல்கர்

    ரகசியம் உடைத்த துல்கர்

    இவர்கள் அங்கு சேர்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் மம்மூட்டி இல்லத்திற்கு பிரபு சென்றிருக்கிறார். அதை குறிப்பிட்டு,"என் தந்தையை பார்க்க, உங்கள் தந்தை சமீபத்தில்தான் எங்கள் வீட்டிற்கு வந்தார்" என்று துல்கர் க்ளூ கொடுத்துள்ளார். அதை வைத்து 30, 40 நபர்களின் பெயர்களை தப்புத் தப்பாக கூறியுள்ளார் விக்ரம். இறுதியாக ஒரு வாரம் கழித்து, தான் மம்மூட்டியின் மகன் என்று துல்கர் அறிமுகப்படுத்திக் கொண்டதும், இத்தனை நாட்கள் மறைத்ததற்காக முதலில் கெட்ட வார்த்தையால் திட்ட தோன்றினாலும், துல்கரை கட்டிப்பிடித்து மகிழ்ந்தாராம் விக்ரம் பிரபு.

    English summary
    Dulquer chased Vikram Prabhu for a week in Mumbai - School flashback
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X