ஆஸ்கருக்கு வித்யா பாலன் படம்!
அமிதாப் பச்சன், சஞ்சய் தத், வித்யா பாலன் ஆகியோரது நடிப்பில் உருவான ஏக்லவ்யா இந்திப் படம், இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளது.
| Click here for more images |
பிரபல இயக்குநர் விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் உருவான படம் ஏக்லவ்யா. வித்யா பாலனின் நடிப்பு இதில் வெகுவாக பேசப்பட்டது. அதுதவிர அமிதாப் பச்சன், சஞ்சய் தத் உள்ளிட்டோரின் நடிப்பும் கவரப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர ஷாருக் கானின் சக் தே இந்தியா, மணிரத்தினத்தின் குரு, அனில் கபூரின் தயாரிப்பில் உருவான காந்தி - மை பாதர் உள்ளிட்ட பல படங்கள் போட்டியிட்டன.
இறுதியில் ஏக்லவ்யாவுக்கு வெற்றி கிடைத்தது. இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப நடுவர் குழு ஒரு மனதாக தீர்மானித்ததாக இந்திய திரைப்பட சம்மேளனத்தின் நடுவர் குழுத் தலைவர் வினோத் பாண்டே தெரிவித்துள்ளார்.
விது வினோத் சோப்ராவின் படம் ஆஸ்கருக்குப் போவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு அவர் எடுத்த குறும்படமான ஏன் என்கவுண்டர் வித் பேஸஸ் 1980லிலும், 1989ல் பரிந்தாவும் ஆஸ்கருக்குச் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











