நடிகரின் கண்ணீர் கதை: ஒரே ஒரு விபத்து.. 30 ஆண்டு நரக வாழ்க்கை.. உயிருக்கு போராடிய நடிகரின் கதை!
சென்னை: இயக்குநர் பாரதி ராஜா பல நடிகர்களை அறிமுகம் படுத்திவைத்து இருக்கிறார். இதில் ஒருவர் தான் நடிகர் பாபு. தன்னிடம் இயக்குநராக இருந்த பாபுவை என் உயிர் தோழன் படத்தில் ஹீரோவாக்கி அழகுப் பார்த்தார். அந்த படத்தை தொடர்ந்து பல படத்தில் நடித்து வந்த பாபு ஒரு விபத்தில் சிக்கி அவரின் மொத்த வாழ்க்கையும் முடிந்து போனது. அவரின் கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
1990 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் உருவான 'என் உயிர் தோழன்' படத்தின் சென்னை தமிழில் பேசி தமிழ் ரசிகர்களில் இடம் பிடித்தார் நடிகர் பாபு. படத்தின் கதை சுமாராக இருந்தால், இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தன. விக்ரமன் இயக்கத்தில் வெளியான பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு ஆகிய படங்களில் நடித்தார். கிராமத்து கதை அம்சம் கொண்ட கதை இவருக்கு பக்காவாக பொருந்திவிட்டதால், தொடர்ந்து அதுபோன்ற கதையிலேயே நடித்து வந்து வந்தார்.

என் உயிர் தோழன் பாபு: 'மனசார வாழ்த்துங்களேன்' என்கிற படத்தில் நடித்து வந்த போது, ஒரு சண்டைக் காட்சி ஒன்றில் மாடியிலிருந்து ஹீரோ குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. இந்த காட்சியில் நடிகர் பாபு டூப் இல்லாமல் நானே குதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், டூப்பை வைத்தே எடுத்துக் கொள்ளலாம், எதற்கு தேவையில்லாத ரிஸ்க் என்று சொல்லி இருக்கிறார் இயக்குநர். பாபுவோ, இதில் ரிஸ்க் இல்லை, நானே குதித்தால் தான் தத்ரூபமாக இருக்கும் எனச் சொல்லி பாபு மாடியில் இருந்து குதித்து இருக்கிறார். அப்போது, யாரும் எதிர்பாராத பாபு தடுமாறிய தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, முதுகு தண்டுவட எலும்பு உடைந்துவிட்டது.
ஒரே ஒரு விபத்து: இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபுக்கு, முதுகு தண்டுவடத்தில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, எழுந்து உங்காரும் அளவிற்கு வந்தார். ஆனால், அதுவும் சில நாட்கள் தான், பின் மீண்டும் படுத்த படுக்கையானார். ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் இனி ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிய பின், வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த பாபுவை அவரின் வயதான அம்மா கவனித்து வந்தார். அவரின் சிகிச்சைக்காக பல நடிகர்கள் பண உதவி செய்தனர். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல பாபு என்ற நடிகரை பலர் மறந்தே போய்விட்டார்கள். ஒரு சிறிய ஓட்டு வீட்டிற்குள் 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக சுருண்டு கிடந்த பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்தார். அவரின் மரண செய்தி கேட்டு மனம் உடைந்து போன பாரதிராஜா, பாபுவின் உடலைப்பார்த்து தேம்பி அழுதார். தன்னுடைய நடிப்பு திறமையால் குறுகிய காலத்தில், புகழின் உச்சிக்கு வந்த நடிகர் பாபுவின் வாழ்க்கையை ஒரு நொடி விபத்து, மொத்தத்தையும் மாற்றிவிட்டது தான் வேதனையின் உச்சம்.


Click it and Unblock the Notifications











