»   »  ஆங்கிலப் பெயரை மாற்றும் தயாரிப்பாளர்கள் தமிழில் திரைப்படப் பெயர்களை வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.தமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே?) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு!).இதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.இதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.குண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,பிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே!

ஆங்கிலப் பெயரை மாற்றும் தயாரிப்பாளர்கள் தமிழில் திரைப்படப் பெயர்களை வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.தமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே?) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு!).இதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.இதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.குண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,பிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் திரைப்படப் பெயர்களை வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே?) ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு!).

இதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.

இதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.

குண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,

பிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil