twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் தமிழ் படம்...எந்திரனுக்கு வயது 11

    |

    சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் படமான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், Danny Denzongpa, சந்தானம், கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

    அந்த ஒரே காரணத்துக்காகதான் திருமணம் செய்தேன்...ஓபனாக பேசிய ரஜினி பட ஹீரோயின்! அந்த ஒரே காரணத்துக்காகதான் திருமணம் செய்தேன்...ஓபனாக பேசிய ரஜினி பட ஹீரோயின்!

    2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் தான் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் தமிழ் படமாகும். கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் படங்களில் அதிக வசூலை கடந்த மூன்றாவது படம் இதுவாகும்.

    விஞ்ஞானியாக ரஜினி

    விஞ்ஞானியாக ரஜினி

    Humanoid robot தயாரிக்கும் முயற்சியில் இறங்கும் விஞ்ஞானி ரோலில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இவரின் காதலி சனாவாக ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். சிட்டி என்ற Humanoid robot வை தயாரிக்கும் வசீகரன், அதை ராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு முன் அதற்கு மனிதர்களை போல் உணர்ச்சி கொடுக்கும் சாஃப்ட்வேரை இணைக்கிறார். ஆனால் சிட்டிக்கு, சனா மீது காதல் ஏற்படுகிறது.

    மாறுப்பட்ட ரோலில் ரஜினி

    மாறுப்பட்ட ரோலில் ரஜினி

    வசீகரன் மீது பொறாமைப்படும் ப்ரோஃபசர் போரா, சிட்டியின் ரெட் சிப்பை மாற்றி, தவறான செயல்களுக்கு சிட்டியை பயன்படுத்த பார்க்கிறார். சிட்டியின் சிப் மாற்றப்பட்டதால், பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை எப்படி வசிகரன் சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. சயின்ஸ் கலந்து வித்தியாசமாக சொல்லப்பட்ட இந்த கதை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாறுபட்ட ரஜினியை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    கமல் நடிக்க வேண்டிய படம்

    கமல் நடிக்க வேண்டிய படம்

    1996 ம் ஆண்டு இந்தியன் படத்தை முடித்த கையோடு, ரஜினியிடம் 3 கதைகளை சொன்னார். முதலில் இந்த கதையில் நடிக்க ரஜினி மறுத்ததால் கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து ஃபோட்டோஷுட்டை நடத்தினார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் படம் தள்ளிப்போனது. சுமார் ஓராண்டிற்கு பிறகு 2008 ல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி. பிறகு ப்ரீத்தி ஜிந்தாவை மாற்றி, ஐஸ்வர்யா ராயை லீட் ரோலில் நடிக்க வைத்தனர்.

    3 மொழியில் ரிலீசான படம்

    3 மொழியில் ரிலீசான படம்

    ப்ரோஃபசர் போரா ரோலில் நடிக்க சத்யராஜ், அமிதாப் பச்சன், பிரிட்டிஷ் நடிகர் Ben Kingsley உள்ளிட்ட பலரிடம் கேட்கப்பட்டது. கடைசியாக தான் Danny Denzongpa விடம் கேட்டுள்ளனர். முதலில் Robot என பெயரிடப்பட்ட இந்த படம், தமிழக அரசின் வரி விலக்கிற்காக எந்திரன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தியில் Robot என்ற பெயரிலேயே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

    வசூலை குவித்த படம்

    வசூலை குவித்த படம்

    உலகம் முழுவதும் மொத்தம் 2250 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை எந்திரன் படம் வென்றது. அனைத்து மொழிகளிலும் எந்திரன் படம் ரூ.580 மில்லியன் வரை வசூலித்தது. முதல் வாரத்திலேயே ரூ.1.17 பில்லியன் வசூலை பெற்றது இந்த படம்.

    ஷங்கரை பாராட்டி கே.பாலச்சந்தர்

    ஷங்கரை பாராட்டி கே.பாலச்சந்தர்

    பாகுபலி 2 படம் ரிலீசாவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த படம் சாதனை படைத்தது. இந்த படத்தை பார்த்து விட்டு, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என ஷங்கரை பாராட்டினார். எந்திரன் தியேட்டரில் ரிலீசான சிறிது நேரத்திலேயே இணையதளங்களிலும் கசிந்தது. இருந்தாலும் அது படத்தில் வசூலை பாதிக்கவில்லை.

    English summary
    Director Shankar's enthiran completes 11 years of theatrical release. this movie was released in 3 languages including tamil. before seven years of bahubali 2, enthiran movie collected above rs.100 crores record.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X