இன்று ஒரே மேடையில் 'எந்திரனும்' 'டெர்மினேட்டரும்'!

By Shankar

இந்திய சினிமாவுலகம் இதுவரை கண்டிராத பிரமாண்ட நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அதுதான் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா.

இந்த விழாவுக்கு ஹாலிவுட் நடிகர், இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா என டெர்மினேட்டரில் ஆக்ஷனில் மலைக்க வைத்த அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பணம் கொடுத்துவிட்டார்களே என்பதற்காக அவர் வரவில்லை. இந்திய சினிமா விழாவொன்றில் பங்கேற்க வேண்டும் என உண்மையாகவே ஆசைப்பட்டு வந்திருப்பதாக அர்னால்ட் கூறியிருந்தார்.

அர்னால்டின் ஆசை

அர்னால்டின் ஆசை

அதுமட்டுமல்ல, இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியுடன் ஒரே மேடையில் பங்கேற்க வேண்டும் என்பதும் அவரது இன்னொரு ஆசை. விழாவுக்கு வர ஒப்புக் கொண்டபோதே, இதையும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் தெரியப்படுத்தினாராம் அர்னால்ட்.

ஷங்கரின் சென்டிமென்ட்

ஷங்கரின் சென்டிமென்ட்

ஷங்கரைப் பொருத்தவரை, தனது முதல் படமான ஜென்டில்மேனிலிருந்து தன் படங்களில் ஏதாவது ஒரு வகையில் ரஜினி இருக்க வேண்டும் என்று நினைப்பவர். 'ரஜினி சாரை என் குடும்பத்தில் ஒருவராக மதிக்கிறேன். அவர் ஏதோ ஒரு வகையில் என் படத்தில் இருந்தால் சென்டிமென்டாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்," என்று ஈரம் பட விழாவில் ஷங்கர் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

ரஜினி

ரஜினி

அர்னால்டின் ஆசை, ஷங்கரின் சென்டிமென்ட் இந்த இரண்டையும் மதித்து, தனது லிங்கா பட ஷூட்டிங்கையும் தள்ளி வைத்து விட்டு விழாவில் கலந்து கொள்ள ஷிமோகாவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

எந்திரனும் டெர்மினேட்டரும்

எந்திரனும் டெர்மினேட்டரும்

சினிமா ரசிகர்களுக்கு இதைவிட கொண்டாட்டமான நாள் இருக்க முடியாது. திரையில் தாங்கள் பார்த்து பிரமித்த டெர்மினேட்டர் நாயகனையும், எந்திரன் சிட்டியையும் ஒரே மேடையில் பார்ப்பது அத்தனை சாதாரண விஷயமா என்ன!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X