இயந்திரன்..முழுக்க முழுக்க ஹாலிவுட்டில்...!

By Staff

Rajini with Shankar
முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது ரஜினியின் இயந்திரன்-தி ரோபோ.

இந்தப் படத்தில் பணியாற்றும் பல கலைஞர்கள் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள்.

இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்திய காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.

இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போவது ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ.

இவர்கள் தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர்-2, ஜூராஸிக் பார்க், பிரிடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள்.

இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேஇஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்ட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் அருண்பாண்டியன் (நினைவிருக்கா?).

கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X