twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனைவியின் கதையிலிருந்து தப்பித்த நான் அந்த இயக்குநரிடம் மாட்டிக் கொண்டேன்... உதயநிதி கலகல பேச்சு

    |

    சென்னை: வணக்கம் சென்னை, காளி திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ளது பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ்.

    காளிதாஸ் ஜெயராமன், தான்யா ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், ரேனுகா நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் ஜூலை 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    இது சம்மந்தமாக சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் உதயநிதி, மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கியமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    வருங்கால முதல்வரே..வருங்கால ஜனாதிபதியே.. திருச்சியில் மாஸ் காட்டிய அஜித்.. கோஷம்போட்ட ரசிகர்கள்!வருங்கால முதல்வரே..வருங்கால ஜனாதிபதியே.. திருச்சியில் மாஸ் காட்டிய அஜித்.. கோஷம்போட்ட ரசிகர்கள்!

    பேப்பர் ராக்கெட்

    பேப்பர் ராக்கெட்

    இறக்கும் தருவாயில் இருக்கும் நபராக சின்னி ஜெயந்த் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கடைசி ஆசையாக கடலுக்கு ஒரு டிரிப் அழைத்துச் செல்கிறார் கதாநாயகன் காளிதாஸ். அதைக் கேள்விப்படும் அதேபோல் இருப்பவர்கள் தங்களையும் ஒரு டிரிப்புக்கு அழைத்துச் செல்லுமாறு காளிதாஸிடம் கேட்டுக் கொள்கிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் கதையாக இருக்கும் என்று டிரைலர் மூலம் தெரிகிறது.

    மிஷ்கின் தான் தொடக்கம்

    மிஷ்கின் தான் தொடக்கம்

    முதன் முதலில் ஒரு குறும்படத்தின் கதையை எழுதிக் கொண்டு இயக்குநர் மிஷ்கினை சந்தித்திருக்கிறார் கிருத்திகா. அதில் சில மாற்றங்களை செய்யச் சொல்ல, அதனை செய்து முடித்து அதனை இயக்கவும் செய்தாராம். அதன் பின் தான் வணக்கம் சென்னை திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிருத்திகா இயக்குநர் ஆவதற்கு முதல் காரணம் நான்தான் என்று மிஷ்கின் கூறியுள்ளார்.

    உதயநிதி கலகல பேச்சு

    உதயநிதி கலகல பேச்சு

    வணக்கம் சென்னை திரைப்படத்தை உதயநிதிதான் தயாரித்திருந்தார். அதன் பின் கிருத்திகா இயக்கிய காளி திரைப்படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. சில சமயம் தனக்கு ஏதாவது கதை எழுதியிருக்கிறாயா என்று உதயநிதி கேட்டால், உனக்கு கிரைம் ஸ்டோரி வைத்திருக்கிறேன் என்று கூறுவாராம். முதல் படமான வணக்கம் சென்னை முழுக்க முழுக்க ரொமாண்டிக் திரைப்படம். காளியில் மூன்று கதாநாயகிகள். ஆனால் எனக்கு கதை சொல்லும்போது மட்டும் கிரைம் கதை சொல்கிறார் என்று உதயநிதி தனது மனைவியை கிண்டல் செய்துள்ளார்.

    மாமன்னன் அனுபவம்

    மாமன்னன் அனுபவம்

    கிருத்திகாவின் கிரைம் படத்திலிருந்து தப்பிப்பதாக நினைத்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் மாட்டிக் கொண்டேன் என்றும் உதயநிதி வேடிக்கையாக கூறியுள்ளார். காரணம் நடிகர் தனுஷிடமே பல டேக்குகளை கேட்பாராம் மாரி. அப்படி இருக்க மாமன்னன் படப்பிடிப்பில், உதயநிதியை ஒவ்வொரு ஷாட்டிலும் பல டேக்குகள் நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுத்துள்ளார். வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    English summary
    Escaped from the wife's story, I got stuck with that director Says Udhayanidhi Stalin
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X