twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத்துக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDThalaAjith

    By Siva
    |

    சென்னை: அஜீத் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடுகிறார்கள்.

    அஜீத் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்த காரணத்தால் #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

    வாழ்த்து

    அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜீத் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்டியுள்ளார்.

    அஜீத்

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார். கடின உழைப்பாளிகளுக்கு சிறந்த இன்ஸ்பிரேஷன் என்று நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார்.

    மரியாதை

    நான் வியக்கும், மதிக்கும் மனிதர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார் என்று வாழ்த்தியுள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

    நிவின் பாலி

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல என்று நடிகர் நிவின் பாலி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விஸ்வாசம்

    தங்க மனசுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. விஸ்வாசத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது என்கிறார் இசையமைப்பாளர் இமான்.

    வாழ்த்து

    அஜீத் பிறந்தநாளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

    வாழ்க்கை

    மேலும் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜீத்தை வாழ்த்தியுள்ளார்.

    வாழ்த்து

    ரசிகர்கள் அஜீத்தை வாழ்த்தி ட்வீட்டிக் கொண்டே இருப்பதால் சிங்கப்பூரில் கூட ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது #HBDThalaAjith

    English summary
    Celebrities and fans have wished Ajith Kumar a very happy birthday. #HBDThalaAjith is trending on twitter not only in India but also in Singapore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X