»   »  குட்டிதல பிறந்தநாள்... இதே நாளில் தான் இந்த இயக்குநரின் மகனும் பிறந்தாராம்!

குட்டிதல பிறந்தநாள்... இதே நாளில் தான் இந்த இயக்குநரின் மகனும் பிறந்தாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் இன்று. அஜித் ரசிகர்கள் ஆத்விக் பிறந்தநாளுக்காக பல விஷயங்கள் செய்து வருகின்றனர்.

ஆத்விக்கின் பிறந்தநாள் சார்பாக மற்றவர்களுக்கு உதவுவது போன்ற வேலைகளில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்விக் பிறந்தநாளையடுத்து, ட்விட்டரில் #KuttyThala எனும் ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இந்த ஹேஸ்டேக்கில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அஜித்

அஜித்

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டவர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

செல்லம்

செல்லம்

திருமணத்திற்கு பிறகு ஷாலினி படங்களில் நடிக்கவில்லை. அஜித் எப்போதும் அவரது குழந்தைகளுக்கான நேரத்தை சரியாகச் செலவழிப்பார். குழந்தைகளை பார்ப்பதற்காகவே ஷாலினி நடிப்பில் ஈடுபடவில்லை.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இன்று அஜித் மகன் ஆத்விக்கிற்கு இரண்டாவது பிறந்தநாள் என்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில இடங்களில் போஸ்டர் ஒட்டியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள்.

சுசீந்திரன் வாழ்த்து

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அஜித் அவர்களின் மகனுக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என பதிவு செய்துள்ளார்.

English summary
Ajith's son Adhvik's birthday is today. So, Ajith fans are celebrating his birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil