மீண்டும் வருகிறார் பாசில்

By Staff

Fazil
மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வெற்றிகரமான இயக்குநராக முத்திரை பதித்த பாசில் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

மலையாளத் திரைப்படங்களின் முகத்தை மாற்றிய முக்கிய இயக்குநர்களில் பாசிலும் ஒருவர். மலையாளத்தில் பாசில் இயக்கிய அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட். அதேபோல தமிழிலும் வெற்றிகரமான இயக்குநராக திகழ்ந்தவர் பாசில்.

கடைசியாக அவர் தமிழில் இயக்கிய படம் ஒரு நாள் ஒரு கனவு. ஸ்ரீகாந்த், சோனியா அகர்வாலின் நடிப்பில் வெளியான இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் பாசில் தமிழ் பக்கம் வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாசில். அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், பிரபல இயக்குநருமான பிரியதர்ஷன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இதற்கு முன்பு தனது மலையாளப் படங்களைத்தான் தமிழில் ரீமேக் செய்வார் பாசில். ஆனால் இந்தப் படத்ைத நேரடியாக தமிழில் இயக்கவுள்ளார்.

இதுகுறித்து பாசில் கூறுகையில், தமிழில் மீண்டும் இயக்க இது சரியான நேரம் என்று கருதியதால் மீண்டும் வருகிறேன். இந்தப் படம் வலுவான குடும்பக் கதை ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நாள் ஒரு கனவு படத்தை இயக்கியபோது பல குழப்பங்கள் இருந்தன. அந்த பிரச்சினைகளை நான் மறந்து விட்டேன்.

புதிய படத்திற்கான கதை ரெடியாகி விட்டது. இசையமைப்பாளரும் கூட முடிவாகி விட்டார். வேறு யார், எனக்குப் பிடித்த இசைஞானி இளையராஜாதான். மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்பேன் என்றார் பாசில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X