ஃபெட்னா 2013: முதல் முறையாக கனடாவில் தொடக்கவிழா!

By Shankar

டொரான்டொ(கனடா): வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னா (FeTNA) வின் விழா ஆண்டுதோறும் வெவ்வேறு நகரங்களில் நடைபெறுவது வழக்கம்.

2013 ஆம் ஆண்டிற்கான ஃபெட்னா விழா, கனடாவின் டொரான்டொ நகரில் உள்ள சோனி அரங்கத்தில் ஜூலை 5, 6, 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கனடியத் தமிழர் பேரவையின் முன்னின்று நடத்தும் இந்த ஃபெட்னா விழா, கனடா நாட்டில் முதன் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Fetna 2013 inauguration in Canada
தமிழக உறவுகளையும் ஈழத் தமிழர்களையும் இணைக்கும் விழா

இதற்கான தொடக்க விழா கடந்த சனிக்கிழமை டொரான்டொ பிரின்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரும், ஃபெட்னா 2013 மார்கெட்டிங் கமிட்டி தலைவருமான துரைரத்தினம் துஷ்யந்தன் தொகுத்து வழங்கினார்.

ஈழத்தின் விடியலுக்காகத் உயிர் ஈந்தோரையும், உலகெங்கும் விடுதலைக்காக உயிர் தந்தோரையும் நினைவு கூர்ந்து அமைதி வணக்கத்தோடு நிகழ்ச்சி தொடர்ந்தது. ஃபெட்னா 2013 ஒருங்கிணைப்பாளர் பிரகல் தொடக்க உரையாற்றினார்.

'தமிழையும் தமிழரையும் போற்றும், ஏற்றும் விழாவாக இவ்விழா தொடர்ந்து அமைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், தமிழ்நாட்டு உறவுகளையும் புலம்பெயர் ஈழத் தமிழரையும் பல கோணங்களில் இணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக ஃபெட்னா 2013 விழா அமையும் என உறுதிபட கூறினார்.

கனடா அரசு ஆதரவுடன்

டொரான்டொ சுற்றுலாத் துறையும், அன்டாரியோ மாநில அரசும் ஃபெட்னா 2013 விழாவை ஆதரிப்பதுடன், உடன் பங்கேற்று நடத்தவும் செய்கிறார்கள்.

அன்டாரியோ மாநில அரசின் குடியேற்ற மற்றும் குடியுரிமை அமைச்சர் 'மைக்கேல் கூட்ரோ' தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அன்டாரியோ மாநில முதல்வர் 'கத்தலின் வின்' அனுப்பியிருந்த வாழ்த்து மற்றும் வரவேற்புச் செய்தியை அமைச்சர் மைக்கேல் கூட்ரோ தெரிவித்தார். முதல்வரின் வாழ்த்துச் செய்தியில், டொரான்டொ ஃபெட்னா 2013 விழா குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் அனைத்து உதவிகளையும் மாநில அரசு நிறைவேற்றித் தரும் என உறுதி அளித்திருந்தார்.

முன்னதாக, அன்டாரியோ வின் விளையாட்டு, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் 'மைக்கேல் சான்' வெளியிட்ட அறிக்கையில், ஃபெட்னா 2013 விழா அன்டாரியோ வின் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு

அமெரிக்காவிலிருந்து ஃபெட்னா 2013 நிகழ்ச்சிக் குழு தலைவர் சுந்தர் குப்புசாமி மற்றும் ஃபெட்னா துணைத்தலைவர் நாஞ்சில் பீட்டர் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழைப் போற்றும் வகையிலேயே நிகழ்ச்சிகள் அமைக்கப்படுவதாகவும், உள்ளூர் கலைஞர்களுக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈழத் தமிழரும் 'தழிழ்த்தூது' என போற்றப்படுபவரும் தமிழ்த் தொண்டருமான தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக ஃபெட்னா 2013 நடைபெற உள்ளது. நூற்றாண்டு நிகழ்வுகள் தொடர்பாக தனிநாயக அடிகளாரின் விழாத் துணைக் குழு உறுப்பினர் ராஜன் பிலிப் அவர்களும் விழாக் குழுத் தலைவர் சிவன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.

தமிழையும் தமிழரையும் உயர்த்தும் வகையிலும் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை புலம்பெயர் தமிழர்களை சரியான முறையில் முன்னிலைப்படுத்தியும் ஃபெட்னா 2013 விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைய வேண்டும் என்ற உறுதிமொழியுடன் தொடக்க விழா நிறைவடைந்தது.

இந்தாண்டு பெட்னா விழாவில் இதுவரை இல்லாத அளழுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்களும், இலக்கியவாதிகளும் பங்கேற்க உள்ளனர்.

ஃபெட்னா 2013 குறித்த மேலதிக தகவல்களை www.fetna2013.ca என்ற இணையத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X