»   »  தசையினை தீ சுடினும்!!

தசையினை தீ சுடினும்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரதியின் தசையினை தீ சுடினும் என்ற வைர வரியைத் தலைப்பாக கொண்டு ஒருஅட்டகாசமான படம் தமிழில் உருவாகிறது.

பெண்மையைப் போற்றிய புதுமைக் கவிஞன் பாரதி. அந்த பாரதியின் பாடல்வரியான தசையினை தீ சுடினும் என்பதையே டைட்டிலாக வைத்து, பெண்மையைப்போற்றும் கதைக் கருவுடன் புதிய படத்தை இயக்கவுள்ளார் விஜய் பிரபாகரன்.

தாய்மையை கதைக் கருவாகக் கொண்டு நிறையப் படங்கள் தமிழில் வந்துள்ளன.ஆனால் அத்தனையிலும் தாய் சென்டிமென்ட்டை வைத்து ஏகப்பட்டகோமாளித்தனங்களைத்தான் செய்திருக்கிறார்கள்.

நடு ரோட்டில் நிற்க வைத்து வில்லன்களை விட்டு அடித்து நொறுக்குவது, மொட்டைஅடிப்பது, விதவைத் தாய்க்கு பொட்டு வைத்து பெண்களின் அனுதாபத்தை பெறுவதுஎன்ற ரீதியில்தான் தமிழ் சினிமாவில் தாய் கேரக்டரை பயன்படுத்தி வந்துள்ளனர்நமது இயக்குநர்கள்.

ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பெண்மை மற்றும் தாய்மைக்கு சிறப்புசேர்க்கும் வகையில் வித்தியாசமான படமாக இந்த தசையினை தீ சுடினும் படம்உருவாகிறதாம்.

இந்தப் படத்தை எஸ்.டி.ஆர். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பரணீதரன் மற்றும்அக்னோ 3 நிறுவனத்தின் ஸ்வாதி ரகுராமன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.இவர்கள் தவிர மாளவிகா, அனுராதா, ரோஹினி ஆகியோரும் தயாரிப்பாளர்கள்பட்டியலில் இருக்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இத்தனை பேரும் நல்லநண்பர்களாம்.

1945, 1977, 2004 ஆகிய காலகட்டங்களைச் சேர்ந்த 3 தாய்மார்களின் கதைதான்இந்தப் படத்தின் கதை. அது என்ன மூன்று கால கட்ட தாய்மார்கள்? அதாவதுசுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்த அம்மா, எமர்ஜென்சி காலத்தில் வாழ்ந்தஅம்மா மற்றும் சுனாமி தாக்குதல் சமயத்து அம்மா என மூன்று அம்மாக்கள் குறித்தகதையாம் இது.

காலங்கள் மாறினாலும் அம்மாக்களின் குணங்களும், அவர்களின் சிறப்பும்எப்போதும் ஒன்றுதான் என்பதை விளக்கும் படமாம் இது. தயாரிப்புக் குழுவினரேபடத்தில் நடிக்கவும் செய்கிறார்கள்.

இப்படத்தின் இன்னொரு விசேஷம், பாரதியின் பாடல்கள் மட்டுமே இப்படத்தில்இடம்பெறவுள்ளது. இதற்காக நான்கு பாடல்களை தேர்வு செய்துள்ளனர்.

7வது மனிதன் படத்துக்குப் பிறகு பாரதியின் பாடல்கள் மட்டும் இடம் பெறும் 2வதுபடம் இந்த தசையினை தீ சுடினும். மணிகண்ட் கத்ரி என்பவர் இசையமைக்கிறார்.எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார்.

குண்டக்க மண்டக்க கோமாளித்தன படங்கள் வரிசை கட்டி வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அம்மாக்களின் கதையை ரசிகர்களுக்கு தரஒரு இளைஞர் பட்டாளம் முன்வந்திருப்பது படு துணிச்சலான முடிவுதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil