»   »  ரஜினி-இன்-காவலர் உங்கள் சேவகர்

ரஜினி-இன்-காவலர் உங்கள் சேவகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி,கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி,மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர்இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டுவருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்குஇதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும்,சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர்உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, நயனதாரா, அசின் உள்ளிட்டோர்நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன் வடிவேலுவும்நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்ஷூட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளைசுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படுதத்ரூபமாக நடித்தார்.

அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால்சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.

இந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ்என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறுஇந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்.

அதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள்படமாக்கப்பட்டன.

தரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில்கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷூட் செய்யப்பட்டது.இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம்உத்தரவிடுவது போல நடித்தார்.

மற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில்குமார் கலந்து கொண்டு நடித்தார்.

வடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களைஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டுவிடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம்.அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம்வடிவேலு.

உச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படிதிரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதிஆகியோரது நடிப்பில் உருவாகும் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதிதியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.

சென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில்இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படுஆவலாக இருக்கிறார்கள்.

சினிமாக்காரர்களின் ஷூட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரேஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப்போயினர்.

இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிரகே.ஆர்.விஜயாவின் தங்கச்சியான கே.ஆர்.வத்சலா, அப்சரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வைரமுத்து டைட்டில் பாடலைஎழுதியுள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil