»   »  பெங்களூர்-கோவா பட விழாக்களில் தமிழ் புறக்கணிப்பு

பெங்களூர்-கோவா பட விழாக்களில் தமிழ் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூருரில் நடைபெறும் இந்திய ஜெர்மன் திரைப்பட விழா மற்றும் கோவாவில் நடைபெறும் சர்வதேசஇந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் இந்திய ஜெர்மன் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி முதல் 23ம் தேதி வரைநடைபெறவுள்ளது. இவ்விழாவை இந்திய திரைப்பட விழா அமைப்பு கமிட்டி, கோதே இன்ஸ்டிடியூட் மேக்ஸ்முல்லர் பவன் மற்றும் பில்ம் பெர்ன்ஸ் பன்ட்ஸ் பலயர்ன் அமைப்பும் இணைந்து மூன்றாவது முறையாகநடத்துகின்றன.

இவ்விழாவை கர்நாடக ஆளுநர் டி.என் சதுர்வேதி தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக கர்நாடாகமுதல்வர் குமாரசாமி (இவர் பட அதிபரும் கூட..) கலந்து கொள்கிறார். இதில் தினம் 5 திரைப்படங்கள்திரையிடப்படுகின்றன.

இந்த பட விழாவில் சிறந்த 10 ஜெர்மன் நாட்டுப் படங்களும், 3 கன்னட படங்களும், 3 மலையாள படங்களும், 4இந்தி படங்களும் திரையிடப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக படங்களைத் தயாரிக்கும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஒரே ஒரு படம் மட்டுமே இந்தவிழாவில் திரையிடப்படுகிறது.

சாரதா ராமநாதன் தயாரிப்பில் வெளியான சிருங்காரம் என்ற படம்தான் அது. வழக்கமாக இது போன்றவிழாக்களில் ஏராளமான தமிழ்ப்படங்கள் திரையிடப்படும்.

ஆனால் இந்த முறை தமிழ்ப் படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 18ம் தேதிதிரைப்படம் பற்றிய கருத்தரங்கும் நடைபெறுகிறது.

கோவா விழாவிலும்:

இதேபோல கோவாவில் வருகிற 23ம் தேதி தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுல்ள சர்வதேச இந்தியதிரைப்பட விழாவிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதிலும் சிருங்காரம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.

சேரன் கண்டனம்: இதுகுறித்து இயக்குநர் சேரன் கோபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேரன் கூறுகையில்,தேசிய அளவில் சிறந்த படங்களை தேர்வு செய்யும்போது, மத்திய குழு நல்ல தமிழ்ப் படங்களைத் தேர்வுசெய்யாமல் பாரபட்சம் காட்டுகிறது.

தேர்வுக் குழுவில், தென்னிந்திய மொழிப் படங்கள் சார்பில் 2 பேர் மட்டுமே குழுவில் இடம் பெறுகின்றனர். மற்ற12 பேரும் வடக்கத்தி ஆட்கள்தான். இதனால் தங்களது மொழிப் படங்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்றுஅவர்கள் நினைத்து விடுகிறார்கள்.

இந்தப் போக்கை மாற்ற வேண்டும். அதற்கு விருதுப் படங்களை தேர்வு செய்யும் குழுவை மாற்றியமைத்தாகவேண்டும். விருது என்பது ஏதோ வெள்ள நிவாரணமாக விமானத்தில் இருந்து போடப்படும் சோற்று மூட்டைஅல்ல. விருதை கேட்டு, கெஞ்சிப் பெற முடியாது. அதுவாக வர வேண்டும். அப்படி நடக்க வேண்டுமானால்,தேர்வுக் குழுவினரில் அனைத்து மொழியினரும் இடம்பெற வேண்டும்.

மக்கள் பார்வைக்கு விருது பெறும் படங்களை அரசு கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும்குறைந்தது 2 பிரிண்டுகளையாவது வெளியிட வேண்டும். அப்போதுதான் தகுதியான படங்களுக்கு விருதுகிடைக்கும் என்றார் சேரன்.

கோவா பட விழாவில் 40 படங்கள் கலந்து கொள்கின்றன. தமிழிலிருந்து சிருங்காரம் மட்டும் இடம் பெறுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிருங்காரம் படத்தில் நடித்திருப்பவர்களில் பலரும் கூட வெளி மாநிலத்தினர் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil