ஐஸ்வர்யா ராய்-சல்மான் காதல் கதை படமாகிறது!

சல்மானும் ஐஸும் லவ்விக் கொண்டிருந்த அந்த ஆரம்ப நாட்களில் இருவரைப் பற்றியும் தினமும் ஒரு செய்தி அல்லது கார சாரமான கிசுகிசு வந்தவண்ணமிருக்கும். அடிக்கடி ஐஸ்வர்யாவின் படப்பிடிப்புகளில் போய், அவருடன் நடிக்கும் ஹீரோக்களைக் கலாய்ப்பது சல்மானுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
இப்படித்தான் ஒருமுறை ஷாரூக்கானுடன் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் சல்மான் தகராறு செய்ய, குறுக்கே வந்த ஷாரூக்கை அறைந்தார்.
ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் போய் பல முறை நள்ளிரவில் கலாட்டா செய்தார். 'இந்த சல்லு ரொம்பத்தான் லொள்ளு' என்ற முடிவுக்கு வந்த ஐஸ், விவேக் ஓபராயுடன் நெருக்கமானார். பின்னர் அவரையும் ஜஸ்ட் லைக் தட் கழற்றிவிட்டு, அபிஷே பச்சனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்த கதையை அப்படியே படமாக்குகிறார் ஜாவேத் கான்!
Comments


Click it and Unblock the Notifications