twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையமைப்பாளர் - பாடலாசிரியருக்கு பங்கு தரமாட்டோம்!-தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

    By Sudha
    |

    Rama Narayanan
    சென்னை: திரைப்படங்கள் மூலம் வருகிற வருமானத்தில் கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு 50 சதவீத உரிமை கோருவதைக் கண்டித்து, டெல்லியில், ஜனவரி 6-ந் தேதி சினிமா தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் அன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், துணைத் தலைவர் ரவிகொட்டாரக்கரா, செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் எல்.சுரேஷ், மும்பை கில்ட்' தலைவர் மகேஷ்பட், செயலாளர் ஹரிசந்த், மும்பை பட அதிபர்கள் சங்க தலைவர் டி.பி.அகர்வால், செயலாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அவர்கள் கூறுகையில், "இந்திய திரையுலகம் இதுவரை சுதந்திரமாக, பிரச்சினையின்றி செயல்பட்டு வந்தது. அதை சீர்குலைக்கும் நோக்கத்தில், இந்தி சினிமா பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர் (இந்தி நடிகை ஷபானா ஆஸ்மியின் கணவர்) கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்களைத் தூண்டிவிட்டு வருகிறார்.

    திரையரங்குகளைத் தாண்டி திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதம் கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்காக, அரசியலில்தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இருக்கிறார் ஜாவேத் அக்தர். இதன் விளைவாக, வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவர இருக்கிறது. அதன்படி, கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வரும் வருமானத்தில் 50 சதவீதத்தை கொடுக்க வேண்டியதிருக்கும்.

    இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

    எனவே மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து, டெல்லியில், ஜனவரி 6-ந் தேதி இந்தியா முழுவதும் உள்ள சினிமா பட தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். அன்று, இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் அன்று நடைபெறாது...,'' என்றனர்.

    இசையமைப்பாளர்கள் ஆதரவு...

    ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள திரைப்பட இசையமைப்பாளர்கள், ஜாவேத் அக்தரின் இந்த கோரிக்கைக்கு பலத்த ஆதரவு காட்டியுள்ளனர். பாடலாசிரியர்களும், கதாசிரியர்களும் முழுமனதோடு ஜாவேத் அக்தரை ஆதரிக்கின்றனர்.

    சினிமா தியேட்டருக்கு வெளியே கிடைக்கிற வருமானம் என்பது படத்தின் இசை, பாடலுக்குத்தான் கிடைக்கிறது. எனவே அக்தரின் கோரிக்கையில் அர்த்தமுள்ளது என்று கூறியுள்ளனர் முன்னணி இசையமைப்பாளர்கள்.

    டெல்லியில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம்...

    டெல்லியில், ஜனவரி 6-ந் தேதி நடைபெற இருக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் பட உலகின் அனைத்து பிரிவினரும் பங்கேற்பார்கள் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் அறிவித்துள்ளார்.

    English summary
    Film producers unanimously opposed Bollywood lyricist Javed Akthar"s demand for sharing 50 percent profit of a film with Music Directors, Lyricist and story writers. They planned to stage a dharna in Delhi on Jan 6 against this demand.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X