»   »  "சன்னுக்கு சந்திரமுகி; கமல், விஜய் படங்களை வாங்கிய ஜெயா!

"சன்னுக்கு சந்திரமுகி; கமல், விஜய் படங்களை வாங்கிய ஜெயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான 3 முக்கியப் படங்களில் 2 படங்களை ஜெயா டிவியும், ரஜினிகாந்த்தின் சந்திரமுகியை சன்டிவியும் வாங்கியுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டுக்கு ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜய்யின் சச்சின் மற்றும் ராஜ்கிரண், ஜெய்ஆகாஷ் நடிப்பில் செவ்வேல் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

இந்தப் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற சன் மற்றும் ஜெயா டிவிக்கு இடையே கடும் போட்டி நடந்துவந்தது. சன் டிவியின் கடுமையான போட்டியையும் மீறி ஜெயா டிவி, சந்திரமுகி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் படங்களை வாங்கிவிட்டதாக முன்பு கூறப்பட்டது.

ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் சச்சின் ஆகிய படங்களை மட்டுமே ஜெயா டிவி வாங்கியுள்ளதாகவும், சந்திரமுகியை கடும்போட்டிக்கு இடையே சன் டிவி பெற்று விட்டதாகவும் இப்போது தெரியவந்துள்ளது.

சந்திரமுகியை ஜெயா டிவி தான் முதலில் கோரி வந்தது. சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் பல்வேறு நெருக்கடிகளால் ஜெயா டிவிக்கேசந்திரமுகியை கொடுக்க முடிவு செய்திருந்ததாம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை,

சன் டிவிக்கே சந்திரமுகியை தற்போது சிவாஜி பிலிம்ஸ் கொடுத்து விட்டது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதாம்.இதற்காக நல்லதொரு தொகையை சன் டிவி கொடுத்துள்ளதாம்.

அதேசமயம், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் சச்சின் ஆகிய இரு படங்களையும் ஜெயா டிவி வாங்கி விட்டது. இருபடங்களுக்கும்சேர்த்து ரூ. 5 கோடி வரை ஜெயா டிவி தரப்பில் தரப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக புதிய படங்களை வாங்கிக் குவித்து வரும் சன் டிவிக்குப் போட்டியாக ஜெயா டிவியும் புதுப் படங்களை வாங்கிவருகிறது. இதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, சன்னுக்கு மட்டும் படம் போய் விடக் கூடாது என்று ஜெயாடிவி நிர்வாகத்திற்கு மேலிடம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாம்.

இதனால் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் புதுப் படங்களை வாங்கிக் குவித்து வருகிறது ஜெயா.

ஜெயா டிவியின் போட்டி குறித்துக் கவலைப்படாத சன் டிவியும், தன் பங்கிற்கு சின்னச் சின்னத் தயாரிப்பாளர்களிடம், படபூஜையன்றே புதுப் படங்களை விலை பேசி வாங்கி விடுகிறது.

இவர்களது போட்டியால் படத் தயாரிப்பாளர்களுக்குத் தான் "பொழப்பு நன்றாக நடப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil