கோடம்பாக்கத்தின் லொகேசன் பீவர் தமிழ்ப் படங்களுக்கு ஹீரோ, ஹீரோயினை விட மிக முக்கியமானதாகிவிட்டது வெளிநாட்டு லொக்கேஷன்.முன்பெல்லாம் ஏதோ ஒரு படத்துக்குத் ஒரு பாடலுக்கு மட்டும் சுவிட்சர்லாந்துக்குப் போய் வருவார்கள். ஆனால், அதெல்லாம் நம்ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டதால், ஒவ்வொரு பாடலையும் ஒரு நாட்டுக்குப் போய் சுட ஆரம்பித்துவிட்டார்கள்.இதனால் இதுவரை படம் பிடிக்கப்படாத லொக்கேஷன்களைத் தேடுவது இயக்குனர்களுக்கும் கேமராமேன்களுக்கும் பெரியசவாலாக இருந்து வருகிறது.அழகான வெளிநாட்டு லொக்கேஷனில் ஒரு பாட்டு இல்லாமல் படமே இல்லை என்ற லெவலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். தங்கர்பச்சான் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. சேரன் கூட தனது ஆட்டோகிராபுக்காக இமயமலையில்ஒரு பனிப் பாடலை சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது இந்த தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் லொக்கேஷன்பீவரால் தான்.பெரிய டைரக்டர்களின் பெரிய படங்கள் தான் என்றில்லை. சும்மா டைட் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்குக் கூடவெளிநாட்டுப் பாடல் கட்டாயமாகிவிட்டது. ஜதி என்று ஒரு படம், புதுமுகங்களாகப் போட்டு எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் கூடஒரு பாடல் காட்சிக்கு அயர்லாந்து போய் வந்தார்கள்.முன்பெல்லாம் மலேசியா, சிங்கப்பூர்.. அப்படியே சுவிஸ் என்று போனவர்கள் இப்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவைமுற்றுகையிட ஆரம்பித்துவிட்டார்கள்.அவ்வப்போது அமெரிக்கா, கனடா, எகிப்து ஆகிய நாடுகள் தமிழ் சினிமாவில் எட்டிப் பார்த்தாலும் இப்போது கோலிவுட்ஆட்களின் ஹாட் லொகேஷனாகத் திகழ்வது நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தான். தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும்இந்த நாடுகளுக்குப் பறப்பது மிக அதிகமாகிவிட்டது.ஷங்கர் தனது பாய்ஸ் படத்துக்காகவும், சிந்து துலானி-தனுஷ் ஆடிப் பாடிய சுள்ளான் படப் பாடலும் நியூசிலாந்தில் தான்படமாக்கப்பட்டன. உள்ளம் கேட்குமே படத்தின் பாடல்களும் இங்கு படமாகின.எல்லோரும் அந்தப் பக்கமே போகிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ ரஜினி தனது சந்திரமுகிக்கு துருக்கிப் பக்கம்போய்விட்டார். முதலில் நியூசிலாந்து என்று முடிவு செய்துவிட்டு கடைசியில் அங்காராவுக்குப் போய் துருக்கியை பேக்டிராப்பாகவைத்து நயனதாராவுடன் ஆடினார் ரஜினி.அதே போல மஜாவுக்காக ஆசின், விக்ரமைக் கூட்டிக் கொண்டு ஆஸ்திரியாவுக்குப் போனார் இயக்குனர் ஷாபி. கேட்டால்,ஆஸ்திரியா மாதிரி ஒரு அழகாக பிரதேசம் இந்த உலகத்தில் இல்லை என்கிறார்.விஜய்யின், சிவகாசியை சுவிட்சர்லாந்தில் எடுத்தார்கள். சூர்யாவின் கஜினியில் ஒரு பாடலும் சுவிஸ்சில் தான் படமானது. அடுத்துசூர்யா-ஜோதிகா-பூமிகா நடிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் பாடல்களை ஸ்பெயினில் எடுக்கவுள்ளார்களாம்.இதற்கிடையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குப் போட்டியாக அயர்லாந்தும் தனது நாட்டில் வந்து படம் எடுக்குமாறுதிரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிடம் டைரக்ட் மார்க்கெட்டி செய்ய ஆரம்பித்துள்ளது. நாட்டின் மிக அழகானலொக்கேஷன்களை பாலிவுட் மற்றும் கோலிவுட், டோலிவுட் படத் தயாரிப்பாளர்களை அணுகி தனது நாட்டு அதிகாரிகள்மூலமாக விவரித்து வருகிறது.அயர்லாந்தில் தான் விஜய்யின் சச்சின் படப் பாடல்கள் எடுக்கப்பட்டன. செல்வராகவன் தனது அடுத்த படத்துக்குஅயர்லாந்துக்குப் போக இருக்கிறாராம்.படப் பிடிப்புக் கட்டணமாகக் கிடைக்கும் வருமானம், நாட்டுக்கு ஓசியாகக் கிடைக்கும் விளம்பரம், அதன் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளின் வருவாய், அதனால் வரும் அன்னிய செலாவணி ஆகியவற்றை மனதில் வைத்து இப்போது பல நாடுகளும்தங்களது லொக்கேஷன்களை சினிமா ஆட்களுக்கு நேரடியாக மார்க்கெட்டி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.இதற்காக கோலிவுட்டில் பல ஏஜென்டுகள் சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் போனால் எந்த நாடுஎன்றாலும் 2 நாட்களில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் விசா ரெடியாகிவிடுகிறதாம்.

By Staff

தமிழ்ப் படங்களுக்கு ஹீரோ, ஹீரோயினை விட மிக முக்கியமானதாகிவிட்டது வெளிநாட்டு லொக்கேஷன்.

முன்பெல்லாம் ஏதோ ஒரு படத்துக்குத் ஒரு பாடலுக்கு மட்டும் சுவிட்சர்லாந்துக்குப் போய் வருவார்கள். ஆனால், அதெல்லாம் நம்ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டதால், ஒவ்வொரு பாடலையும் ஒரு நாட்டுக்குப் போய் சுட ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் இதுவரை படம் பிடிக்கப்படாத லொக்கேஷன்களைத் தேடுவது இயக்குனர்களுக்கும் கேமராமேன்களுக்கும் பெரியசவாலாக இருந்து வருகிறது.

அழகான வெளிநாட்டு லொக்கேஷனில் ஒரு பாட்டு இல்லாமல் படமே இல்லை என்ற லெவலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். தங்கர்பச்சான் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. சேரன் கூட தனது ஆட்டோகிராபுக்காக இமயமலையில்ஒரு பனிப் பாடலை சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது இந்த தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் லொக்கேஷன்பீவரால் தான்.


பெரிய டைரக்டர்களின் பெரிய படங்கள் தான் என்றில்லை. சும்மா டைட் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்குக் கூடவெளிநாட்டுப் பாடல் கட்டாயமாகிவிட்டது. ஜதி என்று ஒரு படம், புதுமுகங்களாகப் போட்டு எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் கூடஒரு பாடல் காட்சிக்கு அயர்லாந்து போய் வந்தார்கள்.

முன்பெல்லாம் மலேசியா, சிங்கப்பூர்.. அப்படியே சுவிஸ் என்று போனவர்கள் இப்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவைமுற்றுகையிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவ்வப்போது அமெரிக்கா, கனடா, எகிப்து ஆகிய நாடுகள் தமிழ் சினிமாவில் எட்டிப் பார்த்தாலும் இப்போது கோலிவுட்ஆட்களின் ஹாட் லொகேஷனாகத் திகழ்வது நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தான். தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும்இந்த நாடுகளுக்குப் பறப்பது மிக அதிகமாகிவிட்டது.

ஷங்கர் தனது பாய்ஸ் படத்துக்காகவும், சிந்து துலானி-தனுஷ் ஆடிப் பாடிய சுள்ளான் படப் பாடலும் நியூசிலாந்தில் தான்படமாக்கப்பட்டன. உள்ளம் கேட்குமே படத்தின் பாடல்களும் இங்கு படமாகின.


எல்லோரும் அந்தப் பக்கமே போகிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ ரஜினி தனது சந்திரமுகிக்கு துருக்கிப் பக்கம்போய்விட்டார். முதலில் நியூசிலாந்து என்று முடிவு செய்துவிட்டு கடைசியில் அங்காராவுக்குப் போய் துருக்கியை பேக்டிராப்பாகவைத்து நயனதாராவுடன் ஆடினார் ரஜினி.

அதே போல மஜாவுக்காக ஆசின், விக்ரமைக் கூட்டிக் கொண்டு ஆஸ்திரியாவுக்குப் போனார் இயக்குனர் ஷாபி. கேட்டால்,ஆஸ்திரியா மாதிரி ஒரு அழகாக பிரதேசம் இந்த உலகத்தில் இல்லை என்கிறார்.

விஜய்யின், சிவகாசியை சுவிட்சர்லாந்தில் எடுத்தார்கள். சூர்யாவின் கஜினியில் ஒரு பாடலும் சுவிஸ்சில் தான் படமானது. அடுத்துசூர்யா-ஜோதிகா-பூமிகா நடிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் பாடல்களை ஸ்பெயினில் எடுக்கவுள்ளார்களாம்.

இதற்கிடையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குப் போட்டியாக அயர்லாந்தும் தனது நாட்டில் வந்து படம் எடுக்குமாறுதிரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிடம் டைரக்ட் மார்க்கெட்டி செய்ய ஆரம்பித்துள்ளது. நாட்டின் மிக அழகானலொக்கேஷன்களை பாலிவுட் மற்றும் கோலிவுட், டோலிவுட் படத் தயாரிப்பாளர்களை அணுகி தனது நாட்டு அதிகாரிகள்மூலமாக விவரித்து வருகிறது.


அயர்லாந்தில் தான் விஜய்யின் சச்சின் படப் பாடல்கள் எடுக்கப்பட்டன. செல்வராகவன் தனது அடுத்த படத்துக்குஅயர்லாந்துக்குப் போக இருக்கிறாராம்.

படப் பிடிப்புக் கட்டணமாகக் கிடைக்கும் வருமானம், நாட்டுக்கு ஓசியாகக் கிடைக்கும் விளம்பரம், அதன் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளின் வருவாய், அதனால் வரும் அன்னிய செலாவணி ஆகியவற்றை மனதில் வைத்து இப்போது பல நாடுகளும்தங்களது லொக்கேஷன்களை சினிமா ஆட்களுக்கு நேரடியாக மார்க்கெட்டி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இதற்காக கோலிவுட்டில் பல ஏஜென்டுகள் சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் போனால் எந்த நாடுஎன்றாலும் 2 நாட்களில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் விசா ரெடியாகிவிடுகிறதாம்.

Read more about: kollywoods location fever
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X