அமீர் படத்தில் மதுமிதா
குடைக்குள் மழை புகழ் மதுமிதா அமீர் படத்தின் நாயகியாகியுள்ளார்.
| Click here for more images |
பருத்தி வீரன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தந்த அமீர் நல்ல இடைவேளை கொடுத்து அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார். இப்படத்தில் அமீர்தான் நாயகன். படத்தின் பெயர் யோகி.
சுப்ரமணியம் சிவாதான் இப்படத்தை இயக்கப் போகிறார். இவர் ஏற்கனவே திருடா திருடி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். முதலில் சமுத்திரக்கனிதான் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென சுப்ரமணியம் சிவாவிடம் படத்தை ஒப்படைத்தார். சமுத்திரக்கனி, அமீரின் சிஷ்யர் என்பது நினைவிருக்கலாம்.
கதை, ஹீரோ எல்லாம் ரெடியானதைத் தொடர்ந்து நாயகி வேட்டையைத் தொடங்கினர். பலரையும் பார்த்தும் திருப்தி வரவில்லை. படத்தின் கதைப்படி பால் வடியும் முகம் கொண்ட நாயகியாகத் தேவைப்பட்டதால் அதற்கு சரியான நடிகை யாரும் சிக்காமல் பெரும் கஷ்டமாகி விட்டதாம் அமீருக்கும், சிவாவுக்கும்.
மும்பையில் நடந்த பல பேஷன் ஷோக்களையும் பார்த்து சலித்தனர். அப்படியும் தேறவில்லை. இந்த நிலையில்தான் மதுமிதா, அமீரின் யோசனையில் விழுந்தார். மதுமிதா நடித்துள்ள இங்கிலீஷ்காரன் படத்தை டிவியில் பார்த்தபோதுதான் அவர் சரியாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தார் அமீர்.
இதையடுத்து மதுமிதாவுடன் பேசி இதர சம்பிரதாயங்களை முடித்துள்ளனர். குடைக்குள் மழை மூலம் பார்த்திபனால் தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் மதுமிதா. அதன் பின்னர் அவருக்கு உருப்படியான முறையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்குக்கு ஷிப்ட் ஆனார் மது. அங்கும் அவருக்கு தோதான வேடங்கள் கிடைக்கவில்லை.
தற்போது நல்வரவு, அறை எண் 305ல் கடவுள் என இரு படங்களில் நடித்து வருகிறார் மது. இந்த நிலையில், அமீரின் படம் கிடைத்துள்ளதால் பரம குஷியாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











