twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!

    By Shankar
    |

    சென்னை: முதல் சென்னை சர்வதேச குறும்படப் போட்டி பிப்ரவரி 20 முதல் 23 வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் படத்துக்கு ரூ 40000 பரிசு வழங்கப்படுகிறது.

    சென்னை திரைப்பட கல்விக் கழகமும் சென்னை நிர்வாகவியல் அமைப்பும் இணைந்து இந்த குறும்படப் போட்டியை நடத்துகின்றன.

    சர்வதேச அளவிலான குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் படங்கள் என மூன்று பிரிவுகளில் குறும்படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இவை கடந்த பிப்ரவரி 2012லிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

    போட்டிக்கான நடுவர்களாக நடிகை ரோகிணி, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், நடிகர் அபிஷேக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தப் போட்டியில் கலந்து கொள்ள 19 நாடுகளிலிருந்து 350 படங்கள் வந்துள்ளன.

    சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்தப் போட்டி நாளை முதல் வரும் பிப்ரவரி 23-ம் தேதி வரை நடக்கிறது.

    போட்டியில் வெல்லும் படத்துக்கு முதல் பரிசாக ரூ 40000 மும், இரண்டாம் இடம் பிடிக்கும் படத்துக்கு ரூ 20000மும், சிறப்பு நடுவர் விருது பெறும் படத்துக்கு ரூ 20000மும் வழங்கப்பட உள்ளது.

    Short Film

    படங்களை ரஷ்ய கலாச்சார மைய அரங்கிலும், வடபழனி நூறடி சாலையில் உள்ள எஸ்ஆர்எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட் அரங்கிலும் திரையிடுகின்றனர்.

    விழாவின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கின்றன.

    English summary
    The First Chennai International Short Film Festival - 2014 will be held in Chennai from Feb 20 to 23rd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X