twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் முதல்பட சம்பளம்.. பேசியது இதுதான்.. ரிலீஸுக்கு பிறகு கிடைத்தது வேறு!

    By
    |

    சென்னை: இயக்குனர் ஷங்கரின் அறிமுகமப் படமான ஜென்டில்மேனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றி தயாரிப்பாளர் குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களின் பட்டியலில் ஜென்டில்மேனுக்கும் இருக்கிறது அழகான இடம்.

    அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, நம்பியார், சரண்ராஜ் நடிப்பில் வெளியான இந்தப் படம் முலம்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகமானார்.

    மாஸ்க் கூட மேட்சிங் மேட்சிங்தான்.. திருமணத்துக்குப் பின் காஜல் வெளியிட்ட ரொமான்ஸ் ஸ்டில்ஸ்!மாஸ்க் கூட மேட்சிங் மேட்சிங்தான்.. திருமணத்துக்குப் பின் காஜல் வெளியிட்ட ரொமான்ஸ் ஸ்டில்ஸ்!

    பாடல்களும் படமும்

    பாடல்களும் படமும்

    1993 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மெகா பட்ஜெட்டில் உருவானது. அன்றைய காலகட்டத்தில் படத்தின் பட்ஜெட்டை பெரிய விஷயமாகப் பேசினார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். பாடல்களும் படமும் மெகா ஹிட். இந்தப் படத்தைத் தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன்.

    ஒயிட் அண்ட் ஒயிட்

    ஒயிட் அண்ட் ஒயிட்

    திருகிய மீசையுடன் எப்போதும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வெண்மையாகக் காட்சியளிக்கும் குஞ்சுமோன், மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்தவர். பவித்ரன் இயக்கிய 'வசந்தகால பறவைகள்' மூலம் தமிழுக்கு வந்தார். சரத்குமார், ரமேஷ் அரவிந்த், ஷாலி நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

    நவரச நாயகன்

    நவரச நாயகன்

    தொடர்ந்து சரத்குமார், ரோஜா நடிப்பில் பவித்ரன் இயக்கிய சூரியன் படத்தைத் தயாரித்தார் குஞ்சுமோன். இதுவும் ஹிட். இந்தப் படத்தில் பணியாற்றினார் ஷங்கர். அந்தப் பழக்கத்தில், தயாரிப்பாளர் குஞ்சுமோனிடம் கதை சொல்ல, தயாரிக்க ஒப்புக்கொண்டார் அவர். முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது, நவரச நாயகன் கார்த்திக்.

    ஐ லவ் இண்டியா

    ஐ லவ் இண்டியா

    அவர் பிசியாக இருந்ததால். ஒருவருடம் காத்திருக்க முடியுமா? என்று கேட்டதால், வேறு ஹீரோவை தேடினர். சரத்குமாரை முடிவு செய்தனர். அவர் ஐ லவ் இண்டியா படத்துக்கு சென்றதால், அர்ஜுன் ஹீரோவானார். இந்தப் படத்துக்காக டைரக்டர் ஷங்கருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றிக் கூறியிருக்கிறார் கே.டி.குஞ்சுமோன்

    50 ஆயிரம் ரூபாய்

    50 ஆயிரம் ரூபாய்

    'அப்ப அவருக்கு பேசப்பட்ட சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன். அப்ப, இதை ரூ.5 கோடியா நினைச்சுக்குங்கன்னு சொன்னேன். படம் பெரிய ஹிட். ஷங்கர், சின்ன வீட்டுல குடியிருந்தார். உடனே ஒரு பிளாட்டை அவருக்கு கிஃப்டா கொடுத்தேன்.

    அது பெரிய கார்தான்

    அது பெரிய கார்தான்

    பிறகு ஒரு மாருதி 800 கார் கொடுத்தேன். அந்த காலகட்டத்துல மாருதி 800, பெரிய கார்தான். பணமும் கொடுத்தேன். அவருடைய ஒவ்வொரு அசிஸ்டென்ட்டுக்கும் கைனடிக் ஹோன்டா பரிசா கொடுத்தேன். படத்துல வேலை பார்த்த எல்லாருக்கும் பரிசு கொடுத்தேன்.

    வாய்மொழி ஒப்பந்தம்

    வாய்மொழி ஒப்பந்தம்

    படம் ஹிட்டானதால எனக்கு நல்ல லாபம் கிடைச்சது. எனக்கு கிடைச்சதை அவங்களோட பகிர்ந்துகிட்டேன். ஜென்டில்மேனுக்கு பிறகு ஐந்து படங்கள் இயக்க ஷங்கரோட வாய்மொழி ஒப்பந்தம் போட்டோம். ஆனா, 2 படத்துக்குப் பிறகு அவர் போயிட்டார்' என தெரிவித்து இருக்கிறார் குஞ்சுமோன்.

    English summary
    After 'Gentleman's super hit, director Shankar was given a car, flat as a gift by producer K.T.Kunjumon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X