»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil


விஜய்காந்த் படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இருக்காது.

இவர் வசனம் பேசியது போக, மிச்சமீதி நேரத்தில் வில்லன்களையும் அரசியல்வாதிகளையும் அடித்து, உருட்டியது போக பிலிம் ரோல்மிச்சம் இருந்தால் பாட்டுக்களை சேர்ப்பார்கள்.

அப்போது தான் ஹீரோயின் வருவார். இந் நிலையில் விஜய்காந்த் இப்போது நடித்து வரும்கஜேந்திரா படத்தில் அவருக்கு ஒரு ஹீரோயின் போதாது என்று இன்னொருவரையும்சேர்த்திருக்கிறார்கள்.

சிம்மாசனம் படத்தில் மந்த்ராவையும் அவருக்கு இணையான உருவம் கொண்ட ராதிகாசெளத்ரியையும் ஜோடிகளாக்கிக் கலாய்த்தார் கேப்டன். அதன் பிறகு இவரது படங்களில் டபுள்ஹீரோயின்கள் இல்லை.

ஆனால், கஜேந்திராவில் லயா தவிர புளோரா என்பவரையும் இடைச் செருகல் செய்திருக்கிறார்கள்.

தூக்கலான கவர்ச்சிக்கு ஹீரோயின் லயாவே ரெடியாக இருந்தாலும், படத்தில் அவரை விடஅதிகமான கிளாமர் லுக்குடன் உள்ள ஒருவர் இருந்தால் நல்லது என்று புளோராநுழைக்கப்பட்டுள்ளாராம்.


இந்தப் படப்பிடிப்பு இப்போது ஆந்திராவில் காட்டுப் பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. சுமார் 3மணி நேரம் காட்டுக்குள் நடந்து போய் சூட்டிங் நடக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம்காட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளன.

காட்டில் இருக்கும்போது படத்தில் ஒரு காட்சியில் புளோராவின் ஜாக்கெட்டுக்குள் கட்டெறும்புபுகுந்து விடுமாம். ஹீரோ விஜய்காந்த் தனது முழுத் திறமையையும் காட்டி கட்டெறும்பை வெளியேஎடுத்து ஹீரோயினைக் காப்பாற்றுவாராம்.


இந்த சீன் முடிந்தவுடன் அடுத்து என்ன இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? பாட்டு தான்.பாட்டு சீனுக்கு உரிய மூட் வரவழைப்பதற்காக இந்த கட்டெறும்பு சீனாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil