நாயகன் கிளைமாக்சுக்காக மும்பை தாதாவைச் சந்தித்தேன் - மணிரத்னம் சொன்ன ருசிகரத் தகவல்
சென்னை: மும்பை தாதா வரதராஜ முதலியாரைச் சந்தித்த பிறகு தான் நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எழுதினேன் என தனியார் ஊடகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மனிரத்னம்.
மேலும் நாயகன் திரைப்படம் குறித்த பல சுவையான தகவல்களை அப்பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன், இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் ஆகியோர் கேள்விகளை எழுப்ப அதற்கு மனிரத்னம் அப்பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.

தோசை ஊட்டிவிட்ட தாதா
நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எழுத மும்பை சென்ற இயக்குநர் மனிரத்னம் அங்கு வரதராஜ முதலியாரைச் சந்தித்திருக்கிறார். முதலில் அவ்வளவு பிடி கொடுக்காமல் பேசிய வரதராஜ முதலியார் பின்னர் மனிரத்னத்தின் கதையைக் கேட்டுவிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதன் பின்னர் அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையிலேயே நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் பல விசயங்களை சேர்க்கும் சிந்தனை மனிரத்னத்திற்கு வந்திருக்கிறது. இதனை மனிரத்னம் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

3 நாட்கள் கால்ஷீட் கொடுத்த கமல்
முதலில் இக்கதையை நடிகர் கமலிடம் சொல்லிய போது அப்போது மிகவும் பிசியாக இருந்த கமல் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதற்கு மனிரத்னம், இல்லை நாங்கள் அடுத்த மாதம் தான் படம் ஆரம்பிக்கப் போகிறோம். அடுத்த மாதம் கொடுத்தால் போதும் என்றிருக்கிறார். அதற்கு கமல், இந்த 3 நாட்களில் எனது 3 விதமான கெட்டப்புகளை வைத்து ஒரு சீனாவது எடுத்து டெஸ்ட் செய்து பாருங்கள் அப்போது ஒரு ஐடியா கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அதன் படி, அந்த 3 நாட்களில் கமலுக்கு 3 விதமான கெட்டப்புகளைப் போட்டு அதிலிருந்து மெருகேற்றப்பட்டது தான் வேலு நாயக்கர் கதாப்பாத்திரம் என மனிரத்னம் கூறியிருக்கிறார்.

இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம்
ஆரம்ப காலங்களில் இளையராஜாவுடன் பணியாற்றி வந்த மனிரத்னம் அதன் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார். ரோஜா திரைப்படத்திற்குப் பிறகு இன்று வரையில் மனிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அந்த வகையில் இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்து கௌதம் மனிரத்னத்திடம் கேட்க, அதற்குப் பதிலளித்த மனிரத்னம், இளையராஜாவிடம் மூன்று காலக்கட்டத்தையும் விவரித்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றது போல் இளையராஜா இசையமைத்துத் தந்தார் எனத் தெரிவித்தார்.

உண்மைச் சம்பவங்களின் கோர்வை
கேங்ஸ்டர் படம் என்பதால் மும்பையில் நடந்த பல சம்பவங்களைப் பற்றி அறிந்து அதையெல்லாம் கோர்த்து, அதிலிருந்து கதாப்பாத்திரங்களின் குணநலங்களையும், அவர்கள் வளரும் எப்படிப்பட்ட மனநிலையில் வளர்வார்கள் என்பது வரையில் கதாப்பாத்திரங்களின் தன்மையை உண்ர்ந்து ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் எழுதியிருக்கிறார் மனிரத்னம். உதாரணமாக வேலுவால் கொல்லப்பட்ட அந்த போலீஸின் மகன் கதாப்பாத்திரப் படைப்பைச் சொல்லலாம். அவன் படித்து வளர்வதற்கு வேலு தான் உதவி செய்வார். ஆனால் தனது தந்தையை கொன்றவர் என்பதை அறிந்தவுடன் அக்கதாப்பாத்திரம் அப்படியே வேலு நாயக்கருக்கு எதிராக மாறுவதன் தன்மையை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதியதாக மனிரத்னம் அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











